பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் - நூற்பா க.அ *ā孕

உள்ளத்து ஊடல் உண்டென மொழிப உள்ளத்துள்ளே ஊடின தன்மை உண்டென்று கூறுவர் புலவர் (எ-று.) :

பரத்தையை ஏத்தவே தலைவன்கட் காதலின்மை காட்டி வழு வாயிற்றேனும் உள்ளத்துாட லுண்மையின் அமைக்க வென்

நார் .

" நாணி நின்றோள் நிலைகண் டியானும்

பேணினென் அல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவுளன் னோள் நின் மகன்தா யாதல் புரைவதாங் கெனவே’’ (அகம். 16)

என வரும் .

ஏத்தினும் என்ற உம்மையால் ஏத்தாமற் கூறும்பொழு தெல்லாம் மாறுபடக் கூறலுளதென்பது பெற்றாம்.

என்னொடு புரையுந ளல்லள் தன்னொடு புரையுநர்த் தானறியுநளே’ (பதிற்றுப்.)

எனவரும் . (க.க)

ஆய்வுரை :

இதுவும் குறிப்புப்பொருளிற்பயிலும் ஒர் உரைத்திற ம் உணர்த்துகின்றது.

( இ-ள்) கற்புக்கடம் பூண்ட தலைமகள் பரத்தையைப் புகழ்ந்து பாராட்டினாளாயினும் அவள் மனத்தகத்தே தலைவ னோடு ஊடினதன்மையுண்டு என்பர் நுண்ணுணர்வினோர் எ-று

ஏத்தினும்’ என் புழி உம்மை எதிர்மறை. பரத்தையை இகழ் தற்கு உரிய தலைமகள் அவளையிகழாது புகழ்ந்தாலும் அப் புகழ்ச்சியுரை அவள் தன் மனத்தகத்தே கொண்ட ஊடற் குறிப் பினை நன்கு புலப்படுத்தும் என்பதாம்.

1. தலைவன் பாற் குற்றங்காணாது அவனது சொல்வழியடங்கி கடக்குக் தலைமகள் தன் கணவனாற் காதலிக்கப்பெற்ற பரத்தையைப் பாராட்டிக் கூறி. னாளாயினும் கணவனது பரத்த மை காரணமாக அவளது உள்ளத்துள்ளே' கடின தன்மை உறுதியாக உண்டு என்பர் உளநூற்புலவர்.

2. ஏத்தினும்’ என் புழி உம்மையால் ஏத்தாமையே பெரும்பான்மை என்பது பெற்றாம்.