பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாசஅ தொல்காப்பியம் பொருளதிகாரம்

காண்க . .

சிறப்பு என்பது இதற்குச் சிறந்தது இஃது எனக் கூறுவத னானே பிறிதோர் பொருள் கொளக் கிடப்பது." (சன்)

நச்சினார்க்கினியம் :

இது, மேல் வெளிப்படக் கிளப்பன கூறிப் பின் வெளிப் படாமற் கிளக்கும் உள்ளுறை இனைத் தென்கின்றது.

( இ-ள் ) உடனுறை. நான்கு நிலத்தும் உளவாய் அந் நிலத்துடனுறையுங் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத்துக் கூறும் இறைச்சியும்; உவமம். அக் கருவாற் கொள்ளும் உள்ளுறையுவமமும் ஏனையுவமமும் சுட்டு-உடனுறை யுவமமும் அன்றி நகையுஞ் சிறப்பும் பற்றாது வாளாது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும் அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டிவருவன வும்; நகை நகையாடி ஒன்று நினைத்து ஒன்று கூறுதலும்; சிறப்பென-ஏனையுவமம் நின்று உள்ளுறை யுவமத்தைத் தருங் கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நிற்றலும் என்று; கெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே-கெடுதலரிதாகிய முறைமையினையுடைய உள்ளுறை ஐந்து வகைப்படும் (எ-று.)

ஒன்றனை உள்ளுறுத்து அதனை வெளிப்படாமற் கூறலின் அவற்றை உள்ளுறையா மென்றார்."

1. தன்னைகோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்ட தலைவன் யான் காதலால நோக்க இவள் நெகிழ்ந்து தனக்குள்ளே மெல்ல நகுகின்றாள். ஆதலால் துடங்கிய இயல்பினையுடையாளாகிய இவளது புன்முறுவலின் கண்ணே தோன்றுகின்றதொரு கன் மைக்குறிப்பு உண்டு' எனக் கூறுவதாக அமைந்த திருக்குறளில், தலைமகளது முறுவலால் அவன் மனத்திற் கொண்ட பிறிதொரு குறிப்புத் தோன்றியது ககையென்தும் உள்ளுறையாகும்.

2. சிறப்பு என்னும் உள்ளுறைக்கு இளம்பூரணருரையில் எடுத்துக்காட்டு இல்லாமையால் அவர்கொண்ட சிறப்பென்னும் உள்ளுறைபற்றி விளக்கத்தினைத் தெரிந்து கொள்ள இயலவில்லை.

3. இவ்வுரைத்தொடர் உடனுறையுமுவமுமன்றி என்றிருத்தல் வேண்டும்.

4. தான் கூறக்கருதியதொன்றனையுள்ளே மறைத்து அதனை வெளிப் டாமற் கூறுதலின் உள்ளுறையென்பது காரணப்பெயராம்.