பக்கம்:நூறாசிரியம்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

நூறாசிரியம்

19

மனையறம் புரந்த மாண்தகு புலவோர்
புனையெழிற் பெண்டிர்ப் போற்றா தியல்பின்
சமைவுறு ஏற்றத் தமைந்தன காட்டக்
கயற்கண் பிறைநுதல் கனியிதழ் பல்முகை
அறற்குழல் துடிதுசுப் படிமரை மலரென 5
ஆரா வியற்கையொடு உய்த்தனர் புகன்றே!
யாங்குகொல் நின்னைப் பொய்ப்புகல் வதுவே
நின்னின் உயர்ந்தன்று பொன்னின் பாவை!
கண்ணின் மேய்ந்தன்று கயலே! கழுத்தே
சங்கின் எதிராது பல்நாணு முகைக்கே! 10
எச்சிற் றுவரிதழ் இன்கனிக் கிளைப்ப;
சேவற் குடுமிச் செம்முது கலவன்
மேயுமை யறல்முன் குழலற வுதிரும்!
துடியினது ஒடுக்கின் நின்னிடை யொடுங்கும்!
அரசுப் பூவடி அடையுநின் னடியே! 15
அணுவின் அண்ணிய பேரா விறையால்
மண்ணுள் விளைந்து மன்னிய வெல்லாம்
தாந்தனி யெழிலொடு தாமிலங் குவபோல்
நின்னிடை மாழ்கிய எழில்நின் னஃதே!
என்றிறத் தானும் இலையிவ ணொப்பே’ 20
அவையவை வயினே அவையவை உயர்வே!
நின்னெழில் நின்வயின் உயர்வே! நீயே
என்னொடு பொருந்தி யிணைத்தனை உயிரே!
ஒன்றிய இரண்டுள் உண்டொன்று சிறப்பே?
புதுமுறை மரபின் போற்றுவ தொழிந்த 25
இதுவோ பூண்டநங் காதல்
அதுவே யாகின் அணைகநம் முயிரே!

20

மின்னகம் புலந்தர மேனி மேயுநின்
கண்கய லசைவைக் கண்டுயர் வென்னா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/452&oldid=1224418" இலிருந்து மீள்விக்கப்பட்டது