பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல் நூற்பா ங்ச for Gf

தேனும் இறைச்சிப் பொருள் என்று கொள்க." (வச)

உஉசு. இறைச்சி தானே பெருப்புறத் ததுவே.

நச்சினார்க்கினியம் :

இது தலைவிக்குந் தோழிக்கு முரியதோர் வழுவமைக் கின்றது. இறைச்சியாவது உள்ள பொருள் ஒன்றனுள்ளே கொள் வதோர் பொருளாகலானுஞ் செவ்வன் கூறப்படாமையானுந் தலைவன் கொடுமை கூறும்வழிப் பெரும்பான்மை பிறத்தலானும் வழுவாயிற்று.

(இ-ள்.) இறைச்சிதானே . கருப்பொருட்கு நேயந்தான்; பொருட் புறத்ததுவே-கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மையுடையதாம் (எ-று.)

'இலங்கு மருவித் திலங்கு மருவித்தே

வானி னிலங்கு மருவித்தே தானுற்ற

1, "தலைமகன் வரைந்து கொள்வது வேண்டித் தோழி தலைமகனை இயற்பழித்த வழித் தலைமகள் இயற்படமொழித்தது’ என்ற துறையில் அமைந்தது இக்குறுக்தொகைப் பாடல். இதனைப் பெருமைபற்றிய வியப்புச் சுவைக்கு எடுத்துக் காட்டாகப் பேராசிரியர் மெய்ப்பாட்டியலுரையிற் காட்டியுள்ளார்.

‘கருங்கோ ற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைத்தாற்போல வழி முறை முறையாற் பேருகற்பாலதாகிய கட்பு, மற்று அவனைக் கண்ணுற்ற ஞான்றே கிலத்தினது அகலம் போலவும் விசும்பின் ஓக்கம் போலவும் கடலின் ஆழம் போலவும் ஒரு காலே பெருகிற்றென்றமையின் இது தன் கண்தோன்றிய பெருமை வியப்பு: இது தலைமகன் கருத்தினுள்ள கட்பிற்குக் கொள்ளுங்கால் பிறன்கண் தோன்றிய பொருமை வியப்பா மென்பது கொள்க." எனப்பேராசிரியர் தரும் விளக்கம் உரிப் பொருளின் புறத்ததாய்த் தோன்றும் குறிஞ்சிப் பூவும் தேனும் ஆகிய இறைச்சிப் பொருளின் இயல்பினைப் புலப்படுத்தல் காணலாம்.

2. இது இறை என்னும் முதனிலையடியாகப் பிறந்த பெயர் இறைச்சி என்ப தாகும். பொருள் என்றது வெளிப்படச் சொல்லப்பட்டுள்ள பொருளை. இங்ங்னம் புலப்படச் சொல்லப்பட்ட பொருளின் புறத்தே தங்கியதாய்க் குறிப்பினாற் கொள்ளப்படுவது இறைச்சிப் பொருள் என்பார், 'இறைச்சியாவது உள்ளதோர் பொருள் ஒன்றனுள்ளே கொள்வதோர் பொருள்' என்றார். அப்பொருள் வெளிப் படையாகச் சொல்லப்படாதது என்பார், செவ்வன் கூறப்படாமையானும்’ என்: றார். செவ்வன் கூறப்படுதலாவது, சொல்லக் கருதிய பொருள் கேட்போர்க்குத்

தெளிவாகப் புலப்படுமாறு சொல்லப்பெறுதல்,