பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


உண்மையான செய்திகளைச் சொல்ல மக்கள் அஞ்சுகிறார்கள். என்முன்னோர்கள் வெள்ளையத்தேவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் வீட்டில் ஒருபழைய ஏட்டுச் சுவடிக் கட்டு இருக்கிறது. அதில் நடந்தது நடந்தபடியே செய்யுட்களாக அந்தக் காலத்தில் எங்கள் பெரியவர்களால் எழுதிவைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் பெரிய நாடகாசிரியரென்றும், மறக் குலத்தில் பிறந்தவரென்றும் கேள்விப் பட்டேன். அந்தச் சுவடிகளை உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். அவற்றை வைத்துக் கொண்டு இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது ஒருகாலத்தில் இந்த உண்மை நிகழ்ச்சிகளை மக்கள் தெரிந்து கொள்ளும் முறையில் நாடகமாக்கி நடிக்கவேண்டும்.”

இவ்வாறு கூறி விட்டுத் தம்மோடு கொண்டு வந்திருந்த ஒரு சிறு மூட்டையை அவிழ்த்தார். கந்தல் துணியில்சுற்றியிருந்த சில சுவடிக் கட்டுகளைச் சுவாமிகளிடம் கொடுத்தார். இதைச் சொல்லும்போது அவர் கண்கள் சிவப்பேறின. குரல் தழுதழுத்தது. சுவாமிகள் அதை வாங்கி இரண்டொரு ஏடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “அருமையான நடை” என்று பாராட்டினார். “இதற்காக உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் சுவாமிகள். ஒன்றும் வேண்டாம், எங்கள் முன்னோர்களின் சிறப்பை ஒரு காலத்தில் உலகம் அறிய வேண்டும். அதுதான் என் ஆசை” என்றார் பெரியவர்.

அதற்குமேல் அவர்கள் பேச்சு எங்களுக்குச் சுவையளிக்காததால் நாங்கள் போய் விட்டோம். அதன்பின் இரண்டொரு நாட்கள் கம்பெனி வீடு முழுவதும் கட்டபொம்மன் பேச்சுத்தான். பெரியவர்கள் ஒவ்வொருவரும் அவ்வீரனைப்பற்றித் தாங்கள் அறிந்திருந்த கதைகளையெல்லாம் சொன்னார்கள். சுவாமிகள் கட்டபொம்மன் நாடகத்தை விரைவில் எழுத உத்தேசித்திருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள்.

நிழற் படங்கள்

எதிர்பாராதபடி சென்னைக்குக் கம்பெனியைக் ‘கண்ட்ராக்டு’ பேச ஒருவர் வந்தார். பேச்செல்லாம் முடிவடைந்து அடுத்தபடியாகச் சென்னைக்குப் போவதென்று தீர்மானிக்கப் பட்டது. அதுவரையில் கம்பெனிக்குப் புகைப்படங்கள் எதுவும்