பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


சென்னையில் யார் யாரோ புலவர் பெருமக்கள், நடிக நடிகையர், சுவாமிகளை வந்து பார்த்தார்கள். பல்வேறு சிகிச்சை முறைகளைக் கூறினார்கள். மருத்துவர்கள் பலர் வந்தார்கள். சிகிச்சை செய்தார்கள். ஒன்றும் பயனில்லை. சுவாமிகளின் பணி விடைக்காகத் தனியாக இருவர் நியமிக்கப் பெற்றார்கள். உரிமையாளர்கள் உண்மையான சிரத்தையோடு சுவாமிகளுக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள்.

கட்டபொம்மன், ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியத்தும் ஆகிய இருநாடகங்களையும் சுவாமிகள் விரைவில் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். எனக்கு ஜூலியத் பாடம் கொடுக்கப் பெற்றிருந்தது. இந்தச் சமயத்தில் எதிர்பாராத நிலையில் சுவாமிகள் நோயுற்றது எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விரைவில் குணப்பட்டு விடுவார்; புதிய நாடகங்களைத் தயாரிப்பார் என்றெல்லாம் உரிமையாளர்கள் எண்ணினார்கள். நம்பிக்கையோடு சிகிச்சை செய்து வந்தார்கள்.

எம்பிரஸ் தியேட்டர்

சுவாமிகளின் பழைய நாடகங்கள் சில பாடம் கொடுக்கப் பெற்றன. வள்ளி திருமணம், அல்லியர்ஜுனா, குலேபகாவலி முதலிய நாடகங்களை நடித்தோம். இந்த நேரத்தில் சென்னை கண்ட்ராக்டு முடிவடைந்து விட்டது. மீண்டும் ஒரு மாத காலம் சென்னையிலே சொந்தமாக நாடகம் நடத்த முடிவு செய்தார்கள். கிராண்டு தியேட்டரில் தொடர்ந்து நடத்துவதைவிட வேறொரு தியேட்டருக்குப் போவது நல்லதென்று எண்ணி, திருவல்லிக்கேணி எம்பிரஸ் தியேட்டரில் நடத்த ஏற்பாடாயிற்று.

இப்போது ஸ்டார் டாக்கீஸ் என்னும் பெயரோடு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வருகிறதல்லவா? இதுதான் அந்த நாளில் எம்பிரஸ் தியேட்டராக விளங்கியது. தியேட்டர் மாறியதும் கம்பெனி வீடும், எங்கள் வீடும் திருவல்லிக்கேணிப் பகுதிக்கு மாற்றப்பட்டன.

திருவல்லிக்கேணிக்கு வந்ததும் எங்களுக்கு நோய் இன்னும் அதிகமாயிற்று. அம்மா, அப்பா, தம்பி பகவதி, தங்கை சுப்பு எல்லோருமே காய்ச்சலில் படுத்துவிட்டார்கள். நாடகங்களுக்கு