பக்கம்:நூறாசிரியம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

நூறாசிரியம்


நலம் கெடப்புரிந்தவன் - என் நலத்தைக் கெடுத்தவனது

நலம் என்றது கற்பை, கெடப் புரிந்தவன் - கெடுத்தவன்.

தோட்குக் கலங்கு - தோளை மருதற்கு விருப்பமின்றி அச்சமுற்று. தோளை மருவுதலாவது - தழுவுதல்

உயிர் சோரக்கலுழும் எம்நிலைக்கே - உயிர்வாட்ட முறுமாறு வருந்துகின்ற எம் நிலைகுறித்து.

சோர்தல்-வாடுதல், கலுழ்தல்- வருந்துதல்.

புலம்புகோ யானே பொன்றுகோ யானே என்பதை ஈண்டுக் கூட்டிக் கொள்க!

தேன்வேட்டு வந்த சிறு கருந்தும்பி கயந்தலைப்படுமுன் நீர்வேட்டுவந்த பெருந்தும்பி பொலங்கிளர் தாமரையை நலஞ்சிதைத்த உவமை கைக்கிளைக்கண் வந்த உள்ளுறை உவமை யென்க!

நலஞ்சிதைத்தானுக்கு அவளை மணங்கூட்ட ஊரார் முற்பட்டமை எற்றாற் பெறுதும் எனின் அவன் தோட்குக் கலங்கி அவன் உயிர் சோரக் கலுழ்தலால் என்க.

இப்பாடல் கைக்கிளை யென்னும் புறத்திணையும் புதுவகைத் என்னும் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/418&oldid=1211264" இலிருந்து மீள்விக்கப்பட்டது