பக்கம்:பாரதி லீலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அவ்விருவருக்குமே நம் தேசிய கக்ஷத்திரம் பிறக் தது. அது 1882-ம் வருஷம் நவம்பர் மாதம் ஆகும். அக்குழந்தைக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிடப்பட்டது. சுப்பிரமணியத்துக்கு ஐந்து வயதானபொழுது அவரது அன்னேயார் இறந்தார். என்னே யின் றெனக் கைந்து பிராயத்தில் ஏங்கவிட்டு விண் ணெய்கிய காய் என்று பாரதியாரே தமது சுய சரிதையில் கூறுகிருர் தாயிழந்தசேயைத் தந்தை யார் பரிவுடன் வளர்த்து உரிய பிராயத்தில் பள் விக்கனுப்பினர். பள்ளியில் படிக்கும்பொழுதே பாரதியார் தம் தந்தையுடன் சமஸ்தானத்துக்குச் செல்வார் ; அங்கே தமிழ் வித்வான்கள் செய்யும் சல்லாபங் களேக் கவனிப்பார். பாரதியாரின் தந்தையும் வித்வான். பாரதியார் பழகிய இடமும் வித்வத் சபை.ஆனதினலே இளவயதில் இயற்கையாகவே பாரதியாருக்குக் கவிதா சாமர்த்தியமுண்டா யிற்று. புலவர்கள் அளிக்கும் ஈற்றடிகளே வைத் துக்கொண்டு அழகிய பாடல்களேக் கவனஞ் செய் யும் சக்தி அவருக்கிருந்தது. அகனலே அவருக் குப் பாரதியார் என்ற பட்டமளிக்கப்பட்டது. அதுமுதல் அவர் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/57&oldid=816577" இலிருந்து மீள்விக்கப்பட்டது