பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உன் கட0தி

இனிப் பரவற்குச் சார்ந்து வருமாறு:-"கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன்' என்னுங் கலிப்பாட்டினுள்,

'அடுதிறல் ஒருவ நிற் பரவுதும் எங்கோன் தொடுகழற் கொடும்பூண் பகட்டெழின் மார் பில் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயல்உறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன் ஒன்று முதுகடல் உலகம் முழுவதும் ஒன்று புரி திகிரி உருட்டுவோன் எனவே'

(யாப்-விரு. அங் மேற்கோள்) என்பதனுட் பாட்டுடைத் தலைமகனைச் சார்த்தியவாறு காண்க. பிறவும் அன்ன. (உ.எ) நச்சர் :

2- g7 இது தேவரும் மக்களுமெனப் பகுத்த முறைமையானே அப் பகுதியிரண்டுங் கூறி இன்னும் அத்தேவரைப்போல் ஒருவழிப் பிறக்கும் பிறப்பில்லாத தெய்வங்களும் பாடாண்டிணைக்கு உரிய ரென்கிறது."

மெனவும் கொள்க’ என்றார் இளம்பூரணர். அவர்கருத்துப்படி பத்துத்பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை என்பது புலவராற்றுப் படையாகும். முருகப் பெருமான் பால் முதுவாயிரவலனாகிய புலவனை ஆற்றுப்படுத்தும் புலவராற்றுப் படையாகிய திருமுருகாற்றுப்படையுள், மாடமலிமறுகின் கூடலாகிய மதுரையின் மேற்கே அகன்ற வயலி. த்தே மலர்ந்த தாமரை மலரின் கண்ணே இரவெல்லாம் இனிது துயில்கொண்ட வண்டினம், வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து, தேன்மணங்கமழும் நெய்தல் மலரிலே இசைமுரன்று, ஞாயிறு தோன்றிய காலைப் டொழுதிலே திருப்பரங்குன்றத்தினையடைந்து ஆங்குள்ள சுனையின் கண்ணே கண் போல் மலர்ந்த விரும்பத்தக்க மலரிடத்தே பரவி ஒலிக்கும் என்னும் இக் கருப்பொருள் நிகழ்ச்சியில், மாடமலிமறுகின் கூடலம்பதியிலே வளமார்ந்த அரண் மனையிடத்தே இரவுப்பொழுதிலே இன் துயில் வதிந்த பாண்டியன், வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து தேங்கமழும் நறுமலர்ப் பொய்கையிலே நீராடி, ஞாயிறு தோன்றும் காலைப் பொழுதிலே திருப்பரங்குன்றத்தினையடைந்து முருகப் பெருமானுடைய திருவருள் நோக்கிற்குரியனாகி அம்முதல்வனைப் பரவிப் போற்றும் வழிபாட்டு நிகழ்ச்சியினை,

'மாடமலிமறுகி ற் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி யெற்படக் கண் போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந் துறைதலும் உரியன்’ (திருமுரு எக-எள) எனவரும் பகுதியில் நக்கீரனார் குறிப்பிற் புல்ப்படவைத்துள்ளார். இந்நுட்பத் தினைக் கூர்ந்துணர்ந்த இளம்பூரண வடிகள்,

'முருகாற்றுப்படையுள், மாடமலிமது கித் கூடற்கு டவயின், இருஞ்சேற்றகல் வயல் விரிந்து வாயவிழ்ந்த, முட்டாட்டாமரைத் துஞ்சி' என்ற வழி ஒருமுகத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காணக என இங்குக் குறிப்பின் விளக் கும் திறம் உய்த்துணர்ந்து போற்றத்தகுவதாகும்.

1. தேவரைப்போல் ஒருவழிப் பிறக்கும் பிறப்பில்லாத தெய்வங்கள் என்றது. ஞாயிறு, கந்தழி, திங்கள் என்பவற்றை, அமரர் என்பது, பலர்பாற் சொல்லாயினும் தேவருள் ஆண் பன்மையைக் குறித்து வழங்கும் வழக்குப் பற்றி 'அம்ரர் என்னும் ஆண்பாற் சொல் என்றார். - -

–21–