பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுச தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

ஆய்வுரை

இது, மேற்குறித்த தும்பைத்திணையின் தறுகண் ஆண்மை யாகிய சிறப்பினை உணர்த்துகின்றது. (இ-ள்) (பலரும் ஒரு வீரனை நெருங்கிப்பொருதற்கு அஞ்சிச் சேய்மையில் நின்று அம் பினால் எய்தும் சிறிது அணுகி நின்று வேல்கொண்டு எறிந்தும் போர் செய்ய, அவர்களாற் செலுத்தப்படும்) அம்பும் வேலும் செறிவுறத் தைத்தமையால் உயிர் நீங்கிய அவ்வீரனது உடம்பு. நிலத்திற்சாயாது நேர்நிற்றலும், (வாள் முதலிய படைக் கலங் களால் வெட்டுண்டு வீழும் அவ்வீரனது) தலையேயாயினும் உடலே யாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாது அறுபட்ட அட்டையின் துண்டங்களைப் போன்று தனித்தனியே எழுந்து ஆடுதலும் என இவ்வாறு இருவகைப்பட்ட ஒப்பற்ற பெருஞ்சிறப்பினையுடையது மேற்குறித்த தும்பைத்திணையாம். எ-று.

சென்ற உயிரின் நின்ற யாக்கையும், இரு நிலந்தீண்டா அரு நிலை வகையும் என இருபகுதிப்பட்ட ஒப்பற்ற பெருஞ்சிறப்பினை யுடையது தும்பைத்திணை என்பதாம். இரு நிலந் தீண்டா அரு” என்றது நீரில் வாழும் அட்டையெனப்படும் சிற்றுயிரை, நீரிலுள்ள அட்டையின் உடம்பு பலகூறாகத் துண்டிக்கப்பட்ட நிலையிலும் அறுபட்ட துண்டங்கள் தனித்தனியே இயங்குமாறு போன்று, போர்க்களத்திற்பொரும் வீரனது தலை அறுபட்ட நிலையிலும் அவனது குறையுடலும் தலையும் நிலத்திற்கிடவாது துள்ளியாடும் நிலையினையே இருநிலந் தீண்டா அருநிலை என்றார் தொல் காப்பியனார். இதனை அட்டையாடல் எனவும் கூறுப.

இந்நூற்பாவில் தும்பைத்திணை வீரர்க்குரியவாகச் சொல்லப் பட்ட சிறப்பினை,

'விலங்கமருள் வியல கலம் வில்லுதைத்த கணை கிழிப்ப நிலத்தீண்டா வகைப்பொலிந்தநெடுந்தகைநிலை யுரைத்தன்று

(பு. வெ. மா. க ச கூ)

என வெருவரு நிலை என்னுந் தும்பைத்துறையுள் வைத்து விளக் குவர் ஐயனாரிதனார்.