பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-எ கOங்.

உதாரணம் :

'கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் றார்ப்பற்றி யேர்தரு தோனோக்கி-தார்ப்பின்னர் ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின் றேர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் கூர்த்த கணை வரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும்'

(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு-அ அக) என வரும். இது பொன்முடியார் ஆங்கவனக் கண்டு கூறியது.

"வேந்துடைத் தானை முனைகெட நெரிதலி னேந்துவாள் வலத்த னொருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கலிற் பொருங்கடற் காழி யனையன் மாதோ' (புறம்-9) என்பதும் அது. 'வருகதில் வல்லே' என்னும் (உ.அஎ) புறப்பாட்டும் அதன் பாற்படும். முன்னர் மாராயம் பெற்றவனே பின் இரண்டு துறை யும் நிகழ்த்துவான் என்றுணர்க."

பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலையும்-வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று தானே போர்குறித்த படை யாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய் தற்குப் பிண்டித்து வைத்த* உண்டியைக் கொடுத்தன் மேயின பெருஞ்சோற்று நிலையும்;

உதாரணம் :

'கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்தெறன் மரபிற் கடவுட் பேணிய ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி யெரும்பு மூசா லிறும்பூது மரபிற்

10. ஏனாதி, கா விதி முதலாக வேந்தனாற் பெறுதற்குரிய சிறப்பினை முன்னம்பெற்றுள்ள படைத் தலைவனே பொருளின்றுய்த்த பேராண் பக்கம், வருவிசைப்புன லைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய பெருமை என்னும் இப் போர்த்துறைகள் இரண்டி னையும் நிகழ்த்துதற்கு உரிமையுடையான் என்பது கருத்து.

11. பிண்டித்து வைத்தலாவது ஒவ்வொரு வீரர்க்கும் தனித்தனியே விரைந்து கொடுப்பதற்கு ஏற்றவாறு திரளையாகப் பகுத்து வைத்தல்,