பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா க.அ உங்-டு

ஒருவாற்றானும் ஒப்பில்லாததாய் உயிர்க்குயிராய்ச் சிறந்த செம் பொருளை எனக்கொள்ளுதல் ஏற்புடையதாகும். இதனைச் சிறப்பென்னுஞ் செம்பொருள் என விளக்குவர் திருவள்ளுவர். இத்தகைய செம்பொருளை இடைவிடாது நினைந்து போற்றுதல்ே ஒத்த அன்பினராய் ஒருவனும் ஒருத்தியும் மக்களொடு மகிழ்ந்து மனையறங்காத்தலாகிய இவ்வுலக வாழ்க்கையின் முடிந்த பயன் என்பதனை,

'காமஞ்சான்ற கடைகோட் காலை ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே'

(தொல்-கற்பு-டுக) எனவரும் நூற்பாவில் சிறந்தது பயின்றல் எனத் தொல்காப்பிய னார் குறித்துள்ளமையும் இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

‘ஏறிய மடற்றிறம் முதலாகிய நோந்திறக் காமப்பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறுபோல புறத்தினை ஐந்தற்கும் இக்காஞ்சித்திணை புறனாகலானும், இக்காஞ்சித் திணைபோல பெருந்திணையும் நிலையாமை நோந்திறம் (துன்பியற்பகுதி) பற்றியும் வருதலானும், பெருந்திணைக்குக் காஞ்சித்திணை புறனாயிற்று' என்பர் இளம்பூரணர்.

எண்வகை மணத்தினுள்ளும் நான்கு மணம் பெற்ற பெருந் திணைபோல இக்காஞ்சியும் அறமுதலாகிய மும்முதற்பொருளின் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகட்கு" ஒத்த மரபிற்றாதலானும், பின்னர் நான்கு எனப்பட்ட பெருந் திணை நான்கினையும் சான்றோர் இகழ்ந்தாற்போல அற முதலிய வற்றின் நிலையின்ம்ைகளைச் சான்றோர் இகழ்தலானும், ஏறிய மடற்றிறம் முதலிய நான்கும் தீய காமம் ஆயினவாறுபோல உலகி யலை நோக்க நிலையாமையும் நற்பொருளன்றாகலானும், உரிப் பொருள்களின் இடையே மயங்கி வருதலன்றித் த்னக்கென நிலமில் லாத பெருந்திணைபோல அறம் பொருள் இன்பம் பற்றி வருவ தன்றி நிலையாமையென்பதோர் பொருள் இல்லையாதல் ஒப்புமையானும் பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று என்பர் நச்சினார்க்கினியர்.

உலகியவில் பலவகைத்துன்பியற்கூறுகளையும் கண்டு அஞ்சிப் பின்னிடாது அவற்றை எதிரேற்றுத் தாங்கி நிற்றல் காஞ்சித்