பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதசை தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

அனையென்றது சுட்டு. நிலை-நிலைக்களம், நிலையது வகை, ஆங்கென்றதனை அனைநிலைவகையொ டென்பதன்கண் வகைக்கு முன்னே கூட்டுக. ஒடு எண்ணிடைச் சொல்லாதவின் முன்னெண்ணியவற்றோடு கூட்டி ஏழாயிற்று.

இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையாவன பார்ப்பார்க்கும் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்புநிகழ்வதற்கு முன்னே களவில் தோன்றினாலும், அவள் பிறர்க்குரியளாகிய காலத்துக் களவில் தோன்றினாலும், அவள் கணவனை இழந்திருந்துழித் தோன்றி னாலும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினாரும், அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன்றினாருமாகிய சாதிகளாம். இன்னோருந் தத்தந் தொழில்வகையாற் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத்திணை யாம். ஒழிந்த பகுதி ஐந்தற்கும் இஃதொக்கும். இன்னும் பெண் பாலுயர்ந்து ஆண்பாலிழிந்தவழிப் பிறந்த சாதிகளும் அனைநிலை வகைப்பாற்படும். யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர்’ அறிவன்றேயத்து அனைநிலை வகையோராவர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப்பக்கத்தாராவர். தகர்வென்றி பூழ்வென்றி கோழி வென்றி முதலியன பாலறிமரபிற் பொருநர்கண் அனைநிலை வகையாம்.

ஒரு வரையறைப்படாது பலதுறைப்படுவனவற்றை யெல்லாம் தொகைநிலையெனத் தொகுத்து ஒரோவொன்றர்க்கிக் கூறினார்: தொகுத்துக் கூறலென்னும் உத்திவகையான். பார்ப்பனவாகை அரசவாகையென்றோதினால் அவற்றின் பகுதி அடங்காமையிற் குன்றக்கூறலாமாதலின் இங்ங்னமோதினார்." காட்டாதனவற் றிற்கு உதாரணங்கள் வந்துழி வந்துழிக் காண்க. ( 2.0) பாரதியார்

கருத்து :- இது, வாகையின் சிறப்புவகைகளைக் கூறுகிறது

பொருள் :- அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்-ஆறு வேறுவகை மரபினரான பார்ப்பாரின் சிறப்பியல்பின் சார்பாயும்,

1 காவிற்றோன்றினும்’

2. ஈண்டு மாமூலர் என்றது. சிவயோ கியராகிய திருமூல நாயனாரை எனக் கருதுதல் பொருந்தும்

3. பார்ப்பனவாகை, அரச வாகை என இவ்வாறு துறைப்பெயர் கூறினால் பார்ப்பார்க்குரிய ஒதல் முதலாகவுள்ள அறுதொழில்களும் அரசர்க்குரிய ஐவகைத் தொழில்களும் அடங்காமையின், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் ஐவகை டிர பின் அரசர் பக்கம்’ எனத் தொகுத்துக் கூறல் என்னும் உத்தியால் ஒரோ வொன்றாக்கிக் கூறினார் ஆசிரியர்,