பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல் நூற்பா- முன்

'தொடு கழல் மறவன் தொல்குடி ற் படுகண் இமிழ் துடிப் பண் புதைத் தன்று'

எனத் துடிநிலையும்,

'ஒளியின் நீங்கள விறற் படையோன் அளியின் நீங்கா அருளுரைத் தன்று'

எனக் கொற்றவை நிலையும் அடுத்தடுத்துக் கூறப்படுதலின் இத் தொல்காப்பிய நூற்பாவுக்கு மறங்கடைக்கூட்டிய துடிநிலை’ என்ற பாடமே ஐயனாரிதனார் கொண்ட பாடம் எனக் கருத வேண்டியுளது. இக்கருத்தினாலேயே மறங்கடைக்கூட்டிய துடி நிலை எனப் பாடங்கொண்டார் நச்சினார்க்கினியர். புறப் பொருள் வெண்பாமாலை கரந்தைப் படலத்தில்,

'மண் டிணி ஞாலத்துத் தொன்மையு மறனும் கொண்டுபிற எறியுங் குடிவர வு ாைத்தன்று' எனக் குடிநிலை யென்ற துறை இடம் பெற்றிருத்தல் கொண்டு இத்தொல்காப்பிய நூற்பாவுக்கு மறங்கடைக்கூட்டிய குடி நிலை' என்ற பாடமும் வழங்கி வந்தமை புலப்படுதலால் அதனையே இளம்பூரணர் பாடமாகக் கொண்டு உரைவரைந்துள் ளார் எனத் தெரிகிறது. இவ்வாறு இந்நூற்பாவுக்கு மற ங்கடைக் கூட்டிய குடிநிலை என இளம்பூரணரும், மறங்கடைக்கூட்டிய துடிநிலை என நச்சினார்க்கினியரும் இருவேறு பாடங்களைக் கொண்டு உரை வரைவதற்கு அடிப்படையாக அமைந்தது, இவ்வுரையாசிரியர் இருவர்க்குங் காலத்தால் முற்பட்டதாய்ப் பன்னிருபடலத்தின் வழிநூலாய்த் தொல்காப்பியத்தின் சார்பு நூலாய் அமைந்த புறப்பொருள்வெண்பா மாலையேயென்பது நன்கு தெளியப்படும். தொல்காப்பியப் புறத்திணையியல் நூற் பாக்களின் பொருளமைதியினையும் தொன்றுதொட்டு வரும் பாட வேறுபாடுகளையும் உள்ளவாறு ஒப்புநோக்கி உய்த்துணர்தற்குத் துணை செய்வது புறப்பொருள் வெண்பா மாலையே என்பது இதனால் நன்கு புலனாகும்.

நிரைகவர்தலாகிய வெட்சிப் பகுதிக்குரிய துறைகளாகத் தொல்காப்பியனார் குறித்த படையியங்கரவம் முதல் கொடை பீறாகவுள்ள பதினான்கு துறைகளையும் அவற்றோடு துடி நிலை , கொற்றவை நிலை என்னும் இரண்டினையும் கூட்டிப் பதினாறு துறை களையும் வெட்சித் திணைக்குரிய துறைகளாகக்

జఇe