பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*a- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

சூழ்ந்துகொண்டு அதன்புறத்தே தங்குதல், வேய் என்றது வேய்க்கப்பட்ட (ஒன்றியறியப்பட்ட) பகைவர் நாட்டின் இடத் தினைக் குறித்தது (தொழில்) ஆகுபெயர். புறம் என்றது அவ் விடத்தின் புறப்பகுதியினை. முற்றுதல்-வளைத்தல். பூசல் மாற்று தம்பசுநிரையை மீட்டுக்கோடல் வேண்டித் தம்முடன் பொருதற்கு வந்த கரந்தை வீரர் செய்யும் போர் நிகழ்ச்சிகளை மேலும் பரவவிடாது விலக்கித் தம் மூர்க்குப் பெயர்தல். நோயின்று உய்த்தல்-(பசுக்கள்) வருத்தமின்றிச் செல்லும்படி அவற்றைச் செலுத்துதல். இன்றி என்னும் வினையெச்சம் இன்று எனத் திரிந்து நின்றது. நுவல் வழித்தோற்றம் பகைப்புலத்து நிரையினைக் கவர்ந்து கொண்டு இன்னவிடத்திலே வந்து சேர்வோம் என வெட்சி மறவர் தாம் சொல்லிச் சென்ற வழி யிடத்தே சொல்லிய வண்ணம் நிரையுடன் வந்து தோன்றுதல். பாதீடு-வெட்சி மறவர் பகைப் புலத்திருந்து தாம் கவர்ந்து வந்த பசுச்களைத் தம் பணிக்கு உதவிய ஒற்றர் முதலிய பலருக்கும் பகுத்துக் கொடுத்தல். பாத்தீடு பாதீடு என்றாயிற்று. பாத்தல்பகுத்தல். இடுதல்-கொடுத்தல். உண்டாட்டு-வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியால் கள்ளுண்டு களித்து ஆடுதல்,

4. மறங்கடைக் கூட்டிய குடி நிலை சிறந்த

கொற் ற வை நிலையும் அத்தினை ப் புறனே.

இளம்: இதுவும் அது.

(இ.ஸ்) மறம் கடை கூட்டிய குடி நிலை-மறத்தொழில் முடித்தலையுடைய குடியினது நிலைமையைக் கூறலும், சிறந்த கொற்றவை நிலையும்-சிறந்த கொற்றவையது நிலைமையைக் கூறலும், அ திணை புறன்-குறிஞ்சித்திணைப் புறனாகிய வெட்சித் தினையாம் .

குடிநிலை என்றதனால் மைந்தர்க்கும் மகளிர்க்கும் பொது வாதல் அறிக.

1. மறம்-வீரர்க்குரிய மறத்தொழில், கடைக்கூட்டுதல்-கடைபோக (நிறைவுபெற)ச் செய்து முடித்தல். குடிநிலையாவது, மறக்குடியிற் பிறந்த மைந்தரும் மகளிரும் ஆகியவர்களது வீரநிலையைக்கூறுதல். இஃது ஆண் பெண் இருபாலர்க்கும் பொதுவாதல் கருதிக் குடிநிலையென வழங்கப் பெறுவதாயிற்று.

துடிநிலை என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். போர்த்தொட லுக்குச் சிறந்த ஊக்கம் அளிப்பது வெற்றி வெல்போர்க்கொற்றவை வழிபாடா தலின் சிறந்த கொற்றவை நிலை எனச் சிறப்பித்தா தொல்காப்பியனார்.