பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம் سج # سه

யின்மையுமாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித் தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்த மரபிற்றாகலானும், பின்னர் நான்கும் பெருந்திணை பெறும் (தொல், களவியல்-கச) என்ற நான்குஞ் சான்றோர் இகழ்ந்தாற் போல அறம் முதலியவற்றது நிலையின்மையுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், ஏறிய மடற்றிற (தொல். அகத்-டுக) முதலிய நான்குந் தீய காமமாயின வாறுபோல உலகியனோக்கி நிலையாமையும் நற்பொருளன்றாக லானும், உரிப்பொருள் இடைமயங்கி வருதலன்றித் தனக்கு நில மில்லாத பெருந்திணைபோல அறம் பொருளின்பம் பற்றியன்றி வேறுவேறு நிலையாமையென்பதொரு பொருளின்றாதல் ஒப்புமை யானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். அகத்-க) ஏழனையும் அகமென்றலின் அவ்வகத்திற்கு இது புறனாவதன்றிப் புறப்புற மென்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ஒக்கும்.

கஅ (அ) பாங்கருஞ் சிறப்பிற் பல்லாந் நானு: நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.

இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்.) பாங்கருஞ் சிறப்பின்-தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக; பல்லாற்றானும்-அறம்பொருள் இன்ப டாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக் கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து-நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்துக் காஞ்சி என்றவாறு."

எனவே, வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று. பாங்குதுணை.

உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட் பகுதி ஏதுவாகக் கூறினன்றி உலகென்பதற்கு வடிவு வேறின்

1. பாங்கு அருஞ்சிறப்பு-தனக்கு ஒப்பில்லாத விட்டின்பம் பாங்கு-ஒப்பு" அருமை-இன் மை. ஒருவர் பெறு தற்குரிய பேறுகள் எல்லாவற்றினும் வீட்டின் வம் சிறந்தமையால் சிறப்பு என் தும் பெயர்த்தாயிற்று. சிறப்பின் எ ன் புழி இன்னுருபு ஏதுப்பொருளிற் பயின்றது.

பல் ஆற்றானும் நில்லா உலகம்-உயிர், யாக்கை, இளமை, செல்வம் முதலிய பல வழிகளாலும் நிலைபேறில்லாத உலகம். இதனாற் காணப்படும் இவ்வுலகினது நில்லா இயல்பினைத் தொல்காப்பியனார் புலப்படுத்தினமை காணலாம். புல்லு தல்-பொருந்துதல்.