பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

දී, සීං දු_. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

அமலுதல் நெருங்குதலாதலின், அமலை யென்பது உம் அப் பொருட்டாயிற்று;

இப் பாரதப்பாட்டும் அது. வாள் வாய்த்து இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்-இருபெரு வேந்தர் தாமும் அவர்க்குத் துணையாகிய வேந்தருந் தானைத் தலைவருந் தானையும் வாட்டொழின்முற்றி ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்ந்த தொகைநிலைக் கண்ணும்;

செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினை.இ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்-போரிடத்தே தன்வேந்தன் வஞ்சத் தாற் பட்டானாகச் சினங்கொண்ட மனத்தனாய்ப் பெரும் படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல புகழைப் பெற்ற நிலைமைக் கண்ணும்:

அது குருகுல வேந்தனைக் குறங்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்களைவரையுங் கொன்று வென்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த் தொழில் போல்வன." தன்னரசன் அறப்போரிடத்துப் படாது வஞ்சனை யாற் படுதலின், அவனுக்குச் சினஞ்சிறந்தது. இச் சிறப்பில்லாத தும்பையும் இக் கலியூழிக்கா மென்பது சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்று’ (தொல்-பொ-புற கடு) என்புழிக் கூறிற்று.

உதாரணம் :'மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபி னருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் ண்ேடெறி சீற்றமொ டிசஆ றியாது துவரை வேந்தொடு மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி

னைவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக்

1. வாள் வாய்த்தலாவது, வாளாற்செய்யுந்தொழில் முற்றுப் பெறுதல்.

2. குருகுல வேந்தனாகிய துரியோதனனை வீமன் தொடையில் துணித்து உயிரைப் போக்கிய காலத்துத் துரியோதனனது சேனைக்குத் தலைவனாகிய அசுவத்தாமா வெகுண்டெழுந்து அன்றிர வில் ஊரையழித்துப் பாஞ்சால வீரர் களையும் தரும புத்திரன் முதலிய பாண்டவர் ஐவருடைய மக்களையும் ஒரு சேரக் கொன்று வெற்றி கொண்ட போர் நிகழ்ச்சி செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினை இ ஒருவன் மண்டிய நல்லிசை நிலை' என்னும் இத்துறைக்கு ຊົງູr எனபது கருதது.

(பாடம்) 3 திறங்கெழு? 4 ஊர்ப்புக் கா வயின் ,