பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GS) G...r தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

காடுறையுலகமாகிய முல்லை நிலமும் கார்காலமும் ஆகிய முதற்பொருளும், அந்நிலத்திற்குரிய கருப்பொருளும், வேந்தன் தலைவியைப் பிரிந்து பாசறைக்கண்ணே தங்கியிருத்தலும் தலைவி தலைவனைப் பிரிந்து மனைக்கண் தங்கியிருத்தலும் ஆகிய உரிப் பொருளும் ஒத்தலால் வஞ்சி என்னும் திணை முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனாயிற்று.

'முல்லைப்புறம் மண்ணசையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவுபுரிதலான் அவ்விருபெரு வேந்தரும் ஒருவினையாகிய செலவு புரிதலின் வஞ்சி என ஒரு குறி பெறும்’ என இளம்பூரணரும், ஒருவன் மண்ணசையால் மேற் சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வரு தலின் இருவர்க்கும் மண்ணசையால் மேற்சேறல் உளதாகவின் அவ்விருவரும் வஞ்சி வேந்தராவரென்றுணர்க' என நச்சினார்க் கினியரும் கூறுவர். இவ்விளக்கம் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகத் தோன்றவில்லை. வஞ்சித்திணையாவது இது வென விளக்கவந்த ஆசிரியர், எஞ்சாமண்நசை வேந்தனை, மேற் சென்று வேந்தன் அடுதல் குறித்தது என ஒருவனது வினையாகவே கூறுதலால், இருபெரு வேந்தருள் மேற்செறலாகிய வஞ்சியொழுக் கத்திற்குரியவன் ஒருவனே என்பதும் மண்ணாசையுடைய மாற்றா னாகிய வேந்தன் அஞ்சும்படி அவன் மேற்படையெடுத்துச் செல் லுதலாகிய வேந்தனொருவனது படையாளர் மேற்கொள்ளும் போர்நிகழ்ச்சியே இங்கு வஞ்சித்திணையெனக் குறிக்கப்பட்டதென் பதும் நன்கு புலனாகும்.

எஞ்சா மண் நசையாவது, தனது நாட்டின் எல்லையளவினைக் கடந்து பிறவேந்தரது நிலத்தினைத் தானே கவர்ந்து கொள்ளுதல் வேண்டும் என எண்ணும் தவிராத பேராசையாகும். எஞ்சாமைஒழியாமை, குறையாமை. நசை-விருப்பம். எஞ்சாநசை என்பது ஒழியாத பேராசை என்ற பொருளில் இங்கு ஆளப் பெற்றது. மேற்செலவுக்கு இலக்காகிய வேந்தனை எஞ்சா மண்ணசை வேந்தன் என அடைமொழி புணர்த்தும் அவன்மேற் படை யெடுத்துச் செல்லும் வேந்தனை வேந்தன்' என அடைமொழி யின்றிக் கூறியது, மண்ணசையாளன் கொண்டுள்ள மண்ணசை அவன்மேற் படையெடுத்துச்செல்லும் இவ்வேந்தனது நிலத்தைக் குறித்ததே என்பதனையும், இவன் அவன்மேற் படையெடுத்துச் செல்லுதலின் நோக்கம் அவன் தனதுநாட்டினைப் பற்றுதற்கு