பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கக శ్రీ లో L

பொருள் வரைந்து, நீரறிவறியா எனத் தொடங்கும் புறப் பாடலை உதாரணங்காட்டுவர் இளம்பூரணர். அவர் கருத்துப் படி வீழ்தல்’ என்றது இறந்து படுதலை. இதனையடுத்து வரும் ‘புறத்தோன் வீழ்ந்த நீர்ச்செருவீழ்ந்த ஊர்ச்செருவீழ்ந்த என வரும் மூன்றடிகளிலும் வீழ்தல் என்னுஞ்சொல் விரும்புதல்’ அல்லது விழைந்து படர்தல் என்ற பொருளிலேயே ஆளப்பெறுத லால் அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் என்ற தொடர்க்கும் அகத்தோன் விரும்பின மதில் காவலும் எனப் பொருள் வரைந்து, 'மணிதுணர்ந்தன்ன (புறம்-உஎஉ) என்ற புறப் பாடலை உதாரணங் காட்டினர் நச்சினார்க்கினியர். தொகை நிலை என்பதற்கு 'அம்மதிலழித்தமையால் மாறுபட்ட வேந்தரும் முரணவிந்தபடி அடைதல்” என இளம்பூரணரும், பரந்துபட்ட படைக்கடற்கெல்லாம் ஒருங்குவரு கெனச் சிறப்புச் செய்தல்' என நச்சினார்க்கினியரும் உரை வரைந்தனர். 'தும்பைத்தொகை நிலைபோல் இருபெரு வேந்தரும் உடன் வீழ்தலும் சிறுபான்மை உளதாமென்றுணர்க' என்பர் நச்சினார்க்கினியர். உழிஞையில் வரும் தொகைநிலை என்னும் இத்துறைக்கு இளம்பூரணர் தந்த விளக்கமே

"எம்மதிலின இகல்வேந்தரும் அம்மதிலின் அடியடைந்தன்று'

எனப் புறப்பொருள் வெண்பாமாலையிலும் இடம்பெற்றுள்ளமை காணலாம்.

உழிஞைத்தினைத் துறைகளுள் இருபெரு வேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியவான துறைகளையுணர்த்துவது இந்நூற்பா எனக் கருத்துரைத்து இதன்கட் கூறப்படுந் துறைகள் யாவும் எயில்முற்றுவோர் எயில்காப்போர் ஆகிய இருதிறத் தார்க்கும் ஒப்பவுரியனவாகப் பொருள்வரைந்து இருபாற்பட்ட துறைகளுக்கும் உதாரணமாகப் பெரும்பொருள் விளக்க வெண் பாக்களை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர்.

இந்நூற்பாவிற் கூறப்படும் துறைகள் சில புறத்தோனுக்கு உரியனவாகவும் சில அகத்தோனுக்கு உரியனவாகவும் ஆசிரியர் தொல்காப்பியனாரால் வரைந்து கூறப்படுதலால், இந்நூற்பாவிற் கூறப்படும் துறைகள் யாவும் புறத்தோன் அகத்தோன் ஆகிய இரு திறவேந்தர்க் கும் ஒன்றாய்ச் சென்று உரியன எனக் கூறுதல் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகாது. இந்நூற். பாவிற் புறத்தோனுக்கு உரியவாகச் சொல்லப்பட்ட துறைகள்