பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LGG தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

நூல்களில் வைசியருக்கும் விலக்கிய அறுதொழிலுடைமையையும் சூத்திரரான நான்காம் வருணத் தமிழருக்குத் தந்து கூறும் உரை ஆரிய நூல்களொடு முரணித் தமிழ் மரபு மழித்ததாகும். வரலாற்றுண்மை சிறிதுமறியாது வேளாளருள்ளிட்ட தமிழ்ப்பெரு மக்கள்ை எல்லாம் கடைக்கீழடிமைச் சூத்திர வருணத்தவரெனக் கூறுந் துணிவு அறிவறம் வெறுக்கும் வேற்றுரையாகும்.

இனி, பெரும் பொழுதாறும் வெயில், மழை, பனி என்ற முன்றிலடங்கும். மூவகைக்காலமும் நெறியினாற்றிய அறிவன்' என்றது, தன்மையால் முழுதும் வேறுபட்ட வெயில் மழை பணி என்ற மூவகைக் காலங்களின் நிலைமையும் விளையும் நுண்ணிதி லுணர்ந்து காலத்தாலாற்றுவ - ஆற்றிப் பயன்கொள்ளும் மதி நுட்பம் நூலோடுடைய அமைச்சரைக் குறிப்பதாகும்.

நாளும் கோளும் கண்டதுபோலக் கொண்டு கூறி வயிறு வளர்ப்போர், கேட்போர் விரும்பும் எதிர்கால நன்மைகளைப் புனைந்து கூறித் தந்நலம் பேணுமளவினர். வேரை எதிர்கால விளைவுகள் எடுத்துக்கூறும் கணிகளெனப்படுவதன்றி, மூவகைக் காலமும் முறையின் ஆற்றிய அறிவர் என்பது அமையாது. அறி வோடமையாது “ஆற்றுதலும்' கூறுதலால், கணிகளின் வேறாய், வி ருவன சூழ்ந்து செயல்வகை தேர்ந்து ஆய்ந்தாற்றும் அறிஞரான அமைச்சரைக் குறிப்பதே கருத்தாதல் தேற்றம்.

தாபதவழக்கு நாவிரண்டாதலு மக்காலவழக்கு. தாபதர்தவம் செய்வார்; (தவம்-உற்ற நோய், நோற்றல். (நோற்றல்பொறுத்தல்) உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலி லிருத்தல், நீரில் நிற்றல், காமங்கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்தல்போலத் திண்ணியோருள்ளங் கண்ணிய வகையின) \

அனைநிலைவகைய' என்பதில், அணைய' எனுஞ்சொல் செய்யுளோசை நோக்கி 'அனை' எனக் குறுகிற்று. அவ்வகைப் பிற வாகைக்குரியவை ஆடல், பாடல், ஓவியமெழுதுதல் போல்வன தேரும் குதிரையும் யானையு மூவரும் திறல்வகை யெல்லாம் இதனுள் அடங்கும். இவை வாகை வகைகளே. வாகைத் துறை களை அடுத்த சூத்திரம் கூறும். ஆய்வுரை

நூற்பா. கசு. இந்நூற்பா வாகைத்திணையினை எழுவகையாகப் பகுத் துரைக்கின்றது.