பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛ö安 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

தொகைநிலையின் வேறுபட்டுப் பொருமிருதிறத்தார் தொலைவும் தெரிவிப்பதாதலின் ஈண்டு வேறு கூறப்பட்டது )

11. செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினை.இ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்-போர்க்களத்தில் தன் வேந்தன் பட்டுவிழ வெகுண்டு அவன் படை மறவன் ஒருவன் அவனை வீழ்த் தியவரை அடர்த்தழிக்கும் தூய புகழ்ப் பரிசும்:

12. பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும், உளப்பட-பலவேறாய பகைப்படையனைத்தும் ஒருவனுக்குடைந்துகெட்டழிந்தவிடத்து அவ்வாறு வென்றவன் வீறுகொண்டு புகழ்க்குரிய தன் வெற்றிவாளை வீசிக் கொன்று குவிக்கும் நூழல் என்னும் துறையும், கூட்ட (ஒருவன் பலரைக் கொன்று குவிக்கும் தறுகண்மை நூழில் எனவும், நூழிலாட்டு எனவும் பெயர் பெறும். அது குவிதலையும் கொல்லுதலையும் குறிக்கும் சொல்லாகும்.)

புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே-பொருந்தி விளங்கும் பன்னிரண்டு துறைகளையுடையது தும்பைத்திணை. (ஈற்றேகாரம் அசை. உம்மைகள் எண் குறிப்பன. பொருட் டொடர்பால் தும்பைத்திணை என்னும் எழுவாய் பெறப் பட்டது.) ஆய்வுரை

நூற்பா. க.ச. இது, தும்பைத்திணையின் துறைகளை விரித்துக்கூறுகின்றது. (இவள்.) காலாட்படையாகிய தானை, யானைப்படை, குதிரைப்படை எனப்பட்ட பகைவர் பொறுத்தலாற்றாது உளம் நடுங்குதற்கு ஏதுவாகிய மூவகை நிலைகளும், மேலாற்பொருது வென்றிமிகுகின்ற தம்முடைய வேந்தனை மாற்றார் படைவீரர் பலரும் சூழ்ந்துகொண்ட நிலையினை வேறோர் இடத்திற் பொருது நிற்கும் வீரனொருவன் கண்டு தான்செய்யும் போரைக் கைவிட்டு முந்துற்றுவந்து தன் வேந்தனொடு பொருகின்றாரை எறிந்து வீழ்த்திய தார்நிலையும், அதுவன்றி இருபெருவேந்த ருடைய படைத்த லைவர்கள் இருவரும் தத்தம் வேந்தர்க்குத் துணையாய் வந்து தம்மிற்பொருது இறக்கும் பகுதியும், படைத் தலைவன் ஒருவன் போர்செய்து பின்னிடும் தனது படையுட் புகுந்துநின்று தனதுபடையின் பின்னணிச் சேனையைத் தானொரு வனாகவே நின்று தாங்கி நிறுத்திய எருமை மறனும், வீரனொ ருவன் தனது மெய்வலியால் (மற்) போர் செய்யும் ஏம நிலையும்