பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-க0 &

°,

டு

ஆய்வுரை

நூற்பா. கூ. இஃது உழிஞைத்திணையின் வகையுணர்த்துகின்றது. ( இ-ள்) முற்கூறியவாறு மதிலை முற்றுதலும் கோடலும் என இருதிறப்பட்டு நிகழும் உழிஞைத்திணை ஒவ்வொரு திறத் திற்கும் நான்கு நான்கு ஆகி எட்டு வகைப்படும். எ-று.

முற்றுதற்கு நான்கும் கோடற்கு நான்கும் என எட்டாயின. 10. கொள்ளார் தேளங் குறித்த கொற்றமும்

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் தொல்லெயிற் றிவர்தலுந் தோலது பெருக்கமும் அகத்தோன் செல்வமும் அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் திறற்பட” ஒருதான் மண்டிய குறுமையும் உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில் உளப்படச் சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே. இளம் : இதுவும் உழிஞை யாமாறு: உணர்த்துதல் நுதலிற்று."

(இ-ள்.) கொள்ளார் தேஎம் குறித்த கொற்றம் முதலாகச் சொல்லப்பட்டன. உழிஞைத் துறையாம்.

கொள்ளார்' தேஎம் குறித்த கொற்றமும்-பகைவரது தேயத் தைக் கொள்ளக் குறித்த கொற்றமும். (கொள்ளார்-தன்னை இறையெனக் கொள்ளாரும் தன் ஆணையைக் கொள்ளாரும்.)

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்-நினைத்தது முடிக்கலாகும் வேந்தனது சிறப்பும்.

இன்னும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் என்ற தனால் அகத்தரசனை அழித்தது கூறலும் கொள்க.

தொல் எயிற்று இவர்தலும்’-தொல் எயிலின்கண் பரத்தலும்.

(படம்) 1 தொல் எயிற்கு இவர்தலும் தோலி ன்.

2 திறப்பட.

3. இஃது உரிஞையின் துறை வகையினை விரித்துரைக்கின்றது எனக் கருத் துரையமைதல் பொருத்தம கும்.

4. கொள்ளார்-பகைவர். இச்சொல், வேந்தனாகிய தனது ஆட்சித்தலை மையினை ஏற்றுக்கொள்ளாது முரணிநிற்போரையும் தனது ஆணையினை ஏற்றுக்கொண்டு அதன் வழி அடங்கி ஒழுகா தாரையும் குறித்க நின்றது.

5. தொல்லெயிற்கவர் தல்’ என்பது நச்சினார்க்கினியருரையிலுள்ள பாடம், இதுவே திருந்திய பாடமாகும்.

எயிற்கு-காயிலின் கண், உருபும யக் கம்.