பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுஉ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவ ளம்

வாக முடியக்கடவது எனக் கூறும் ஒப்பற்ற சிறப்புடைய வஞ்சினக் காஞ்சியும்.

7. இன்னகை மனைவி பேஎய் புண்ணோற் றுன்றுதல் கடிந்த தொடா அக் காஞ்சியும்-புண்பட்டோன் உளையாவாறு இனிய வரியில் நகை' வாய்ந்துவரும் அவன் மனைவி அவனைப் பேய் நெருங்காமற் காத்துத் தொடவிடாத தொடாக் காஞ்சியும்; 8. நீத்த கணவற் றீர்த்த வேலிற் பெயர்த்த மனைவி ஆஞ்சி யானும்-அவனுடலொடு தன்னையும் வீட்டிறந்த கணவனை முடித்த வேலினால் அவன் மனைவி கண்டோரஞ்சுமாறு தன்னு யிரைப் போக்கிய ஆஞ்சிக்காஞ்சியும்;

9. நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட் பாடஞ்சியமகட்பாலானும்-குடித்தொன்மையில் ஒவ்வாநிலையில் ஒத்தானாகக் கருதி மகள் கொள்ளப் படையொடு வந்த மன்ன னொடு தொல்குடி மகளைப்படுத்தலஞ்சி அதை விலக்க அவள் தன்னையர் வந்தவனொடு தம்முயிரைப் பொருட்படுத்தாது பொரும் மகட்பாற்காஞ்சியும்;

'களிறணைப்பக் கலங்கின காஅ எனவரும் அடைநெடுங் கல்லியார் புறப்பாட்டில்,

'ஏர்பரந்த வயல்' என்னும் குன்றுார்கிழார் மகனார் புறப் பாட்டும், (புறம் க.க. அ) "கானக்காக்கை' என்னும் அரிசில் கிழார் பாட்டும் (புறம் க.ச.உ மகட்பாற் காஞ்சித்துறையை விளக்குதல் உணர்க.

10. கொண்டோன் தலையொடு, முலையும் முகனும் சேர்த்தி, முடிந்த நிலையொடு தொகைஇ, ஈரைந்தாகுமென்பஇறந்த தன் கணவன் தலையைத் தன் மார்பினும் முகத்தினும் அணைத்து அவனோடு மனைவி தானும் மாய்ந்த முதுகாஞ்சி யொடு கூட்டி விழுப்பவகைக் காஞ்சித்துறை பத்தாகும் என்பர் புறநூற் புலவர் ஒருசாரார்.

இனி, விழுப்பவகைக் காஞ்சித்துறை பத்தும் கூறுகிறார். அவை வருமாறு :

11. பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்ற மாய்ந்த பூசன் மயக்கத்தானும்-மிகுந்த புகழொடு பொருது மடிந்த குரிசி லொருவனை வளைந்திரங்கும் சுற்றத்தார் அரற்றி ஓய்ந்த அழுகைக்குரலரவ மயக்கமாம் காஞ்சியும்;