பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கன 2- உக

சேர எண்ணுதலமையாதாதலின், “இருபாற்பட்ட' எனவும், வகைக்கு ஒன்பதேயாதல் குறிக்க 'ஒன்பதிற்றுத்துறைத்து’’ எனவும் விளக்கினார் இந்நூலார்.

இதில்வரும் இன்னும் ஆனும் உரை யசைகள்: பாங்கு பக்கம் என்பன இசை நிரப்பு: ஈற்றேகாரம் அசை. ஆய்வுரை

நூற்பா. கன்

இது வாகைத்திணையின் துறைகளை விரித்துரைக்கின்றது.

(இஸ்) கூதிர்ப்பாசறை வேனிற் பாசறை என்னும் இருவகைப் பாசறையிடத்தும் காதலால் ஒன்றிய உள்ளத்தனாகிப் போர்க் களத்தில் நிகழ்த்த வேண்டிய போர்முறைகளை ஆராய்ந்திருந்த இயல்பும், ஏர்த்தொழில் புரிவாராகிய உழவர் விளையுட் காலத்துச் செய்யும் வென்றியன்றித் தேரோராகிய பொருநர் போர்க்களத்து நிகழ்த்தும் வென்றியும், தேரின்கண் அமர்ந்து பொருத அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிமகிழ்ச்சி யாலே தேர்த்தட்டிலே நின்று வீரர்களோடு கைகோத்தாடும் குரவையும், தேரோரை வென்ற வேந்தனுக்குப் பொருந்திய இயல் பான தேரின் பின்னே கூவிச் சுற்றம் ஆடும் குரவையும், பெரும் பகையினைத் தடுத்தற்குரிய வேலின் வெற்றியும், வெல்லுதற்கு அரிய (அகப்) பகையைத் தடுத்து நிறுத்தும் பேராற்றலும் (உயிரும் உடம்பும் ஒன்றியின்புறும் உலகியல்) வாழ்க்கையைப் பொருந்தாத வல்லாண்மைப் பகுதியும், தன்னொடு பொருந்தாதாராகிய பகை வர் நாணுமாறு பெரியோரைக் குறித்து, இன்னது செய்யேனாயின் இன்ன நிலையை யடைவேன்’ எனச் சொல்லிய வகையிரண்டி னுள்ளே ஒன்றுடன் பொருந்திப் பல பிறப்புக்களிலும் பழகி வருகின்ற தன் உயிரை (த்தீயில்) அவியாக வழங்கிய அவிப் பலியும், பகைவரிடத்தும் மனம் பொருந்தித் தன் உடல் பொருள் ஆவியினை உளமுவந்து வழங்கும் அன்பின் திறமும், (எருதும் எருமையும் ஆகிய) பகட்டினாலும் (யானையும் குதிரையும் ஆகிய) மாவினாலும் முறையே பசியும் பகையும் ஆகிய தீமைகளைப் போக்கும் சிறப்பினையுடைய உடலுழைப்பும் உள்ளத்துறுதியும் அமைந்தோரது கூறுபாடும், நாடாள் வேந்தன் தனது அரசவுரிமை யினைத் துகளாக நீத்துத் துறவினை மேற்கொண்ட பகுதியும், எண்வகைக் கணத்தினை மதிப்புடைய பொருளாகக் கொண்ட அவையகத்தார் சிறப்பும், உயர்ந்த நூல்களால் விதிக்கப்பட்டுக் கட்டுதலமைந்த ஒழுக்கத்தொடு பொருந்தியதற்காட்சியும், வளவிய