பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உ0 令儿莎新。

திரு ஆற்றல் ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற் றன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னுஞ் சொல்லாகும். இச்சொல் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாய்ப் புலவராற் பாடப்பெறும் தலைமக்களது ஒழுகலாலாகிய பண்புடைமையினையுணர்த்திற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

ஒரு நிலத்திற்குரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக் கிளை என்னும் அகத்திணையாகும். அதுபோல ஒரு பாலுக்குரித் தன்றி ஒருவரையொருவர் யாதானும் ஒர் பயன் கருதியவழிப் பாடப்பெறுவது பாடாண். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரி ரக்கமல்லாத செந்திறத்தால் வருவதும் இரண்டற்கும் ஒக்கும் தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்டப், புலவர் பரிசில் வேண் டுதலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளையோடு ஒத்தலால் பாடாண்டிணை கைக்கிளையென்னும் அகத்திணைக்குப் புறனா யிற்று.

குடும்பவாழ்விலே ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயலாகிய அகவொழுக் கமும், அரசியல் வாழ்விலே போர்மறவர் முதலியோர் மேற் கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்னும் அறுவகைப் புறவொழுக்கங்களும் ஆகிய இவ் வொழுக்கங்களை நிலைக்களன்களாகக் கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை ஒழுக லாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவர் பால் நிகழ்வன. பாடாண் திணையிலோ பாடுதல் வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காரணமாகிய பண்பும் செயலும் பாட்டுடைத் தலைவர்பாலும் நிகழ்வன. வெட்சிமுதலிய ஆறுதிணைகளும் தலைமக்களுக்குரிய பண்புகளை யும் செயல்களையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றுந் தனி நிலைத் திணைகள், பாடாண் திணையோ தலைமக்கள்பால் நிகழும் மேற்கூறிய திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களன் களாகக் கொண்டு தோன்றும் சார்புநிலைத் திணையாகும். எனவே போர்மறவர்பால் அமைவனவாகிய வெட்சி முதலிய புறத் திணைகளிலும் குற்றமற்ற மனைவாழ்க்கையாகிய அகத்திணை யிலும் அமைந்த செயல்களாய்த் தலைமக்களுக்குரிய கல்வி தறு கண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்பு களாய்ப் புலவராற் பாடுதற்கமைந்த ஒழுகலாறு பாடிாண்தினை