பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கன 2一墨.新°

11. கட்டில் நீத்த பாலினாலும்-அரசுகட்டிலை இகழ்ந்து துறக்கும் உரவோர் பரிசும்;

(இங்குக் "கடிமனை நீத்த பாலினாலும் எனப் பாடல் கொண்டு, "பிறர்மனை நயவாமை குறிக்கும், என்பார் இளம் பூரணர். அஃதான்ற அறவொழுப்பாமெனினும் இல்வாழ்வார் எல்லார்க்கும் பொது அறமாதலின் தனி ஒருவர் வாகைக்குரிய வீறாகாது. அன்றியும், அதனினும் அருமைத்தாகும் அறிவழி காமவெறியொழி விறலை இதன் கீழ்க் காம நீத்த பாலினாலும் எனக் கூறுதலான், அதிலடங்கும் பிறர்மனை நயவாமையைத் தனித்தொரு துறையாக்குதலிற் சிறப்பில்லை. இன்னும் அப் பாடங்கொள்ளின், இறைமைச் செல்வத்தை இகழ்ந்து துறக்கும் உள்ள வெறுக்கையைக் குறிக்கும் வாகைத்துறை இல்லா தொழியும் ஆகையால், இங்குக் கட்டில் நீத்த பால்’’ எனும் பாடமே சிறத்தலறிக.)

12. எட்டுவகை நுதலிய அவையத்தானும்-எண்வகைச் சால்புகளும் நிறைந்தார் மன்றத்து மதிக்கப்பெறுஞ் சிறப்பும்;

குறிப்பு : - அவையத்து முந்தியிருக்கும் வீறு கூறுகிறது. அத்தகைய சால்புகள் ஒழுக்கம், கல்வி, குடிப்பிறப்பு, வாய்மை, தூய்மை, நடுவுநிலை, அவாவின்மை, அழுக்காறாமை, எனப் படுதல் நூலானறிந்தது.

13. கட்டமையொழுக்கத்துக் கண்ணுமையானும்-வரை யறுத்த ஒழுக்கங் கருதும் உரனும்;

(குறிப்பு :- கண்ணுமை, கண்ணுதல் அடியாகப்பிறந்த பண்புப் பெயர். (கண்ணுதல்-கருதல்) ஆளுதல் ஆண்மை எனவும், புகழ்தல் புகழ்மை எனவும் வருதல் போன்றது. விருப்பை வென்று அறிவாற் புலனைக் கட்டுப்படுத்துவதே ஒழுக்க மாதலின், கட்டமையொழுக்க மெனப்பட்டது. அதுவாகை யாதல், “ஐந்தடக்கலாற்றின்', ஐந்தவித்தானாற்றல்'-எனப் புலனடக்குதல் அரிய திறலாகக் கூறப்படுதலானறியலாம். (இனி, 'கட்டமை’ என்பதற்கு அறநூல் விதித்த எனப் பொருள் கூறித் தரும சாத்திரங்களுக்குச் சார்வபெளம ஆதிக்கமளிப்பர் சிலர்; தரும நூல்கள் மக்களுக்குத் தம்முள் மாறுபட விதிப்பன வாதலானும், அவற்றை எழுதியோ ராணைக்கு உளச் சான்றுக்கு எதிராக எல்லாரும் கட்டுப்படுதல் இயல்பன்றாதலானும், ஒருகால் அவ்வகைக் கட்டுப்பாடு வற்புறுத்தப்படுமேல் அது வாகையாகா மையானும், அது பொருளன்மையறிக )