பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கன உ.உந்)

பொருந்தியிருந்து அமர்கருதிய முறையும். (பாசறை எனினும் கட்டுரெனினும் ஒக்கும்.)

நக்கீரர் பாடிய நெடுநல்வாடையில் 166முதல் 188 முடியவுள்ள அடிகளில் வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கி என்பது முதல் பாசறையில் கூதிரின் பரிசு கூறப்படுவ தறிந்தின்புறுக.

மலைமிசைக்குலைஇய’ எனும் மதுரை எழுத்தாளன் அகப் பாட்டும், மூதில்வாய்த் தங்கிய எனும் பெரும் பொருள் விளக்க வெண்டாவும் இத்துறைச் செய்யுட்களாகும்.

நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டில் 5; 71 முதல் 86 முடிய 100 முதல் இறுதிவரையுள்ள அடிகளில் வினைமேற் சென்ற தலைவன் மீளற்குரிய காருக்குமுன் போரை விரும்பிக் காதலை வென்று களத்துத் தங்கும் வேனிற் பாசறைப் பரிசு விளக்குதல் கண்டு மகிழ்க.

2. ஏரோர் களவழியன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்-களமர் களத்தில் நெற்போரடித்தல் முதலிய விழவார்ப்போடு, போர்க்களத்தில் தேர் மறவர் வெற்றிவிழவின் வீறும்;

3. தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையும்-தேர் மறவரை வென்றழித்த குரிசிலின் தேர்முன் அவன் கடை மறவர் களித்தாடுங் குரவைக் கூத்தும்.

4. ஒன்றிய மரபிற் பின் தேர்க்குரவையும்-அதனொடு பொருந்து முறையானே வென்ற குரிசில் சென்ற தேரின்பின் அவன் தானை மறவரும் ஏனை விறலியரும் அவன் புகழ் பாடி வாழ்த்தி யாடும் குரவைக்கூத்தும்; இனி, தேர்ப்பின் களத்துப் பிணக் கூழுண்ணும் பேய்களாடுங் குரவை எனினும் அமையும்)

5. பெரும்பகை தாங்கும் வேலினாலும்-தனதிற் பெரிய பகைப்படையைத் தடுக்கும் வேல் வென்றியும்,

(பகை-என்பது பகைப்படைக்கு ஆகுபெயர். தாங்குதல்தடுத்தல்)

6. அரும்பகை தாங்கும் ஆற்றலானும் தடுத்தற்கரிய மாற் றலர் தானை மடங்கத் தடுக்கும் திறலும்.

(இதிலும், பகை"-பகைப்படைக்கு ஆகுபெயர்) —16