பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கூ0 க. டுக

எனவருவது பாடாண் திணையில் ஒம்படையுள்ளிட்ட வாழ்த்துத் துறையாகும்.

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் காலமூன்றொடு கண்ணியவருமே-உலகியலில் வரும் ஒழுக்க நோக்கால் முக்கால முந் தழுவிப் பாடாண் துறைகள் வரும்.

குறிப்பு :- இப்நூற்பாவில் வரும் உம்மைகள் எண் குறிப்பன. 'பக்கம்” என்பது இசை நிரப்ப நின்றது ஈற்றேகாரம் அசை,

இதிற்கூறப்படுந் துறைகள் எல்லாம் பலதிறப்பட்ட புறத் திணைகளுக்குரியவெனினும், அவை அவ்வத்திணைப் பொரு ளோடமையாது தலைவன் புகழ் பரவல்களயும் வருதலால் பாடாண்துறைகளாய் முடிகின்றன. அதனாலவை முன் பிற திணைகளோடு கூறினும் ஆங்குவேறு பொருணோக்குடைமையின், இங்கவை கூறியன கூறும் குற்றமாகாமை தேறப்படும்.

ஆய்வுரை

இதுவும் அது.

பாட்டுடைத் தலைவர் பலர்க்கும் பொதுவாகவுரிய பாடாண் திணைத் துறைகளை முன்னைச் சூத்திரத்தில் விரித்துக்கூறிய ஆசிரியர், நாடாளுந் தலைவர்களாகிய மன்னர்க்கே சிறப்புரிமை யுடைய பாடாண்திணைத்துறைகளை இச்சூத்திரத்தால் விரித் துரைக்கின்றார். ஆதலின் "இதுவும் அது எனக் கருத்துரை வரைந்தார் இளம்பூரணர்.

(இ-ள்) குற்றமில்லாத நல்ல புகழைப் பெறுதற்குரிய செயல் களைக் கருதி நிறைவேற்றும் நிலையில் தறுகண்மையுணர்வுடன் துயில் கொண்டிருந்த அரசரைச் சூதர் ஏத்தி எழுப்பிய துயிலெடை நிலையாகிய பள்ளியெழுச்சியும், ஆடல் மாந்தராகிய கூத்தரும் இசைபாடுதலில் வல்லபாணரும் (ஒருவரைப்போன்று ஒத்து நடித் தலில் வல்ல) பொருநரும் (எண்வகைச் சுவையும் குறிப்பும் புலப் பட ஆடுதலில் வல்ல) விறலியும் வழியிடையே தம்மினத்தாரை எதிர்ப்பட்ட காலத்துத் தாம் பெற்றுள்ள பெருவளத்தாலும் பசியடநின்ற அவரது வறுமைத்துயராலும் தம்முள் மாறுபட்ட தோற்றத்தினராய்த் தோன்றிய நிலையில், வள்ளலிடத்துப் பரிசில் பெற்ற பெருவளமுடையோர், அங்ங்னம் பெறாதாரை நோக்கி, இன்ன வள்ளலிடத்துச் சென்றால் யாம் பெற்ற பெரு வளத்திணை நீவிரும் பெறலாம் என அறிவுறுத்தி, அவர்களும் தாம் சென்ற நெறியிற் சென்று பயன்பெறும் வண்ணம் சொல்லி

நூற்பா. 1.0