பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம் بني ز) سa

வஞ்சின மரபின் ஒன்றோடு பொருந்தித் தொன்றுதொட்டு வருகின்ற உயிரை வழங்கிய அவிப்பலியும்.

ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கும்-பொருந்தாதார் இடத் தின் கண் பொருந்திய பக்கமும்.

அஃதாவது, போரில்வழி நாடு கைத்தென்று கொண்டு உவத்தல். (கைத்து-கையகப்பட்டது. உவத்தல்-வெகுளிவிட்டி ருத்தல்.)

நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் பெருமலை யானையொடு புல்ங்கெட இறுத்துத் தடந்தாள் நாரை படிந்திரை கவரும் முடந்தை நெல்லில் கழைஅமல் கழனிப் பிழையா விளையுள் நாடகப் படுத்து வையா மாலையர் விசையுநர்க் கறுத்த பகைவர் தேனத்து ஆயினும் சின வாய் ஆகுதல் இறும்பூதாற் பெரிதே.'

(பதிற்றுப். உ) என்பதனுள் பகைவர் நாடு கைக்கொண்டிருந்தவாறு என்க.

பகட்டினானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்-பகட்டினானும் ஆவினானும் குற்றம் தீர்ந்த சிறப்பினை யுடைய சான்றோர் பக்கமும்.

பகட்டால் புரை தீர்ந்தார் வேளாளர். ஆவால் குற்றம் தீர்ந் தார் வணிகர், இவ்விரு குலத்தினும் அமைந்தார் பக்கமும். அவர்

தொல்லுயிர்-தோற்றமில்காலமாக (அ.நாதியே) உள்ள பழமையான உயிர். எனவே நீண்ட நெடுங்காலமாக அழிவின்றி நிலைபெற்றுள் ளது உயிர் என்பது தொல்காப்பியனாரது தத் துவக் கொள்கையாதல் புலனாம். அவிப்பலியாவது, விரன் தன் உயிரைப் போர்த் தீயுள் அவியுணவாக வழங்குதல்.

1. ஒல்லார் இடவயின்-பகைவரிடத்தின்கண். புல்லியபாங்கு-பொருந்திய - ۲ مسا 犀 பகைவராயினார் தம்மொடு போர் புரிதலாற்றாது தம்மைப் பணிந்து அணுகிய நிலையில் பகைவர் நாடு தம் கையகத்தது என்று கொண்டு உவந்து பகைவர்கள் பாலும் இரக்கம் மீது ர்ந்து பகைவரை நண்பராகவும் அவர் நாட்டு மக்களைத் தம் குடிமக்களாகவும் கொண்டு அன்புடையராதல்,

பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு (அஎச) என வரும் திருக்குறள் இத்துறைக்குரிய விளக்கமாக அமைந்ததுள்ளமை காண ೯೩ff ಓ8 :

கைத்து-கையகத் கது. 2. பகடு-எருது. ஆ-பசு, துகள் த பு-குற்றம் தீர்ந்த இங்குச் சான் றோர் என்றது, முறையே வேளாளரையும் வணிகரையும்.

“பகட்டினானும் மாவினானும்’ எனப்பிரித்துப் பொருள் வரைவர் நச்சினார்க் கினியர்.