பக்கம்:பாரதி லீலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கண்ணன் பாட்டு கண்ணன் பாட்டு அக்ஷர லக்ஷம் பெறும் என்று ஸ்வர்க்கவாசி வ. வே. சு. அய்யரே சொல்லியிருக்கிரும். கண்ணன் என் சேவகன் என்ற பாட்டு, சிறந்த கருத்துக் கொண்டது. கண்ணம்மா என்குழந்தை என்ற பாட்டு நம்மை அன்பு கனியச் செய்கிறது. ஒடி வருகையிலே-கண்ணம்மா உள்ளங் குளிருதடி ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய் ஆவிதழுவுதடி என்ற வரிகள் பன்முறையும் படிக்க வேண்டியன. கண்ணன் என்விளையாட்டுப் பிள்ளை 'யிலே விளே யாட்டுப் பிள்ளைத் தனம் தாண்டவமாடுகிறது. தின்னப் பழங்கொண்டு தருவான்-பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என்னையன் என்ருல்-அதனை எச்சில் படுத் திக் கடித்துக் கொடுப்பான். மானுெத்த பெண்ணடி யென்பான்-சற்று மனமகிழு நேரத்திலே கிள்ளி விடுவான். அழகுள்ள மலர் கொண்டு வந்தே என்னை அழஅழச் செய்து பின் "கண்ணை மூடிக்கொள் குழலிலே சூட்டுவேன் ' என்பான்-என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். 激 錄 蛛 擦 அங்காந்திருக்கும் வாய்தனிலே-கண்ணன் ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான், என்ற வரிகள் சிறு பிள்ளை விஷமத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/71&oldid=816593" இலிருந்து மீள்விக்கப்பட்டது