பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

67


மேல் கூலி கிடைத்துவிட்டதே. அபூர்வமான விழா அல்லவா நடந்தேறியிருக்கிறது.

வெங்கட்ட சுப்பிரமணியத்துக்கு அனுப்பிய கடிதம் படங்கள் வரவேற்பு பத்திரங்கள் எல்லாம் வந்தன.

கொஞ்சம் பிந்தி வந்து சேர்ந்ததால் கூட்டுப் படத்தையும் அதற்குத் தகுந்த குறிப்பையும் மாத்திரம் இந்த வாரத்துக் கல்கியில் போடுகிறார்கள். அல்லாத பட்சம் இன்னும் விரிவாகவே கல்கியில் திருநெல்வேலி கலைவிழாவைப் பரப்பியிருப்பார்கள். -

உபசாரப் பத்திரங்களில் உண்மையும் உணர்ச்சியும் எப்படித் துலங்குகின்றன என்று வாசித்துப் பாாத்தவர்கள் எல்லாரும் சொல்லுகிறார்கள். உபசாரப் பத்திரம் உண்மைப் பத்திரமாய் இருப்பதாலேயே அனுபவிக்கக் கூடியதாயிருக்கிறது. தமிழின் கதி (ஸ்டைல்) வெகு அழகாய் இருக்கிறதென்று எல்லாரும் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது.

கவிஞரது கவி இலக்கணம் வெகு அருமையாய் வாய்த்திருக்கிறது. இந்த மாதிரி இலக்கணம் தொல்காப்பியர், பவணந்தி, தண்டி மற்றும் யாப்பிலக்கிய பிரகிருதிகள் ஒருவரும் எழுதவில்லை. அந்த இலக்கணத்தைத் தங்கள் வெள்ளிப் பூங்கொடிகளுக்குள் வைத்துத் துலக்கியிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.

என்னையும் நீங்கள் லேசில் விடவில்லை. வெளுத்து வாங்கி விட்டீர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கம்பருக்கு நான் செய்த சேவைகளில் எல்லாம் பெரிய சேவை அவரை அனுபவித்த சேவைதான். நான் அறிந்த காரியத்தை ஊர் அறிந்ததில்லையே என்று சொன்னால்