பக்கம்:பதினாறும் பெறுக.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

செல்வ: அவுங்க ஏண்டா அப்படி நிக்கிறாங்க அப்படிங்கறது, இங்கே வந்து தாழம்பூ வோட ஆட்டத்தையும் பாட்டத்தையும், தளுக்கையும் மினுக்கையும் பார்த்தப்புறமல்ல எனக்குத் தெரியுது ஏம்மா நீங்க தாழம்பூவோட தாயாருதானுங் களே ?

கமல: ஆமாங்க.

செல்வ: ரேட்டு ஒங்ககிட்டேயே பேசிக்கலாமா ?

கமல: ஐயா! ரேட்டு பேசுவது இருக்கட்டும். நீங்கள் எங்கேயோ போகிறவர் வழி தவறி இங்கே வந்திருக்கிறீர்கள். முதலில் தயவு செய்து எழுந்திருங்கள்.


செல்வ: ஏம்மா கேக்கற பணம் நான் கொடுப்பேனா மாட்டேனாங்கிற சந்தேகமா ? நான் யாருங்கறது. ஒங்களுக்குப் புரியலேன்னு நெனைக்கிறேன்.

தாழம்பூ: சந்தினத்திற்கும் சகதிக்கும் வித்தியாசம் தெரியாதவர் என்பது நன்றாக புரிகிறது. புரிந்திருந்தால் இசைத்தட்டு நடனத்திற்கு என்னை வந்து அழைத்திருப்பீரா?

செல்வ: ஏன் அந்த ஆட்டத்தை ஆடகூடாதா கைநிறைய பணம் கொடுக்கறேன். கூட்டத்திலே மாலை மாரியாதை செய்யறேன்.


கமல! அப்புறம் இரவு உம்முடைய மாளிகையில் தங்க வைப்பீர் விருந்து நடத்துவீர், துணிமணிப் பரிசு கொடுப்பீர். படுக்கப் பிடிக்க வசதிகள் செய்வீர் இல்லையா ?

செல்வ: அடடா என்னோட தகுதியும், நிலையும் உனக்குத் தெரிஞ்சித்தான் இருக்குது என்னோட எண்ணத்த அப்படியே சொல்லிட்டியேம்மா !


கமல: ஐயா, பிரவுவே நன்றாகத் தெரிந்துதான் நான் சொன்னேன். இடந்தெரியாமல் வந்து விட்டீரென்று. காசும், காமக்களி யாடலும், உமக்குப் பெருமை தரலாம். தெய்வத்திற்கும், திருவிழாவுக்கும் பெருமைதராது. அந்த நடனக் கலை வியாபாரம் எங்களிடமில்லை. நீர் போய் வரலாம்.

செல்வ: போயிட்டு மறுபடியும் வரவா ?

கமல: வேண்டாம் வேண்டாம் போனால் போதும் திரும்பி வரவே வேண்டாம்.

செல்வ: (சினந்து) ஆகா! பெட்டைச் சிறுக்கிகளே ! என்ன திமிர் ஒங்களுக்கு ? என்னோட சங்கதி தெரியாமே, வாயை வித்துப் போட்டீங்க. ஆகட்டும் பார்த்துக்கிறேன்.

(திரும்பி வேகமாக வெளியேறுகிறார்)

தாழம்பூ: தெய்வமே இதுபோன்ற ரசிக மணிகளிடமிருந்து கலைஞர்களை நீதான் காப்பாற்றவேண்டும்:

(சொல்லிவிட்டு மேசைமேலிருந்த ஒரு புத்த கத்தை எடுத்துக்கொண்டு கிளம்புகிறாள் தாழம்பூ

கமல் : தாழம்பூ என்ன புத்தகம் அது ?

தாழம்பூ: (அஞ்சி) இது...வந்தும்மா ....இந்தப் புத்தகம்....நான்

வாங்கலே... , ..என்னுடையதல்ல. . -