பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

கெடிலக்கரை நாகரிகம்


மலையமான் திருமுடிக்காரி

நற்றிணையில், 77, 100, 120, 291, 320 ஆம் பாடல்கள் மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள், 77, 291, 320ஆம் பாடல்கள் கபிலராலும், 100ஆம் பாடல் பரணராலும் பாடப்பட்டவை, 120ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர் தெரியவில்லை.

குறுந்தொகையில், 208, 312ஆம் பாடல்கள் இம் மன்னனைப் பற்றிப் பேசுகின்றன. இவை கபிலரால் பாடப்பட்டவை.

அகநானூற்றில், அம்மூவனாரால் இயற்றப்பெற்ற 35ஆம் பாடலிலும், கல்லாடனாரால் இயற்றப்பெற்ற 209ஆம் பாடலிலும் திருமுடிக்காரியைப் பற்றிய செய்திகளைக் காணலாம்.

புறநானூற்றில், கபிலரால் பாடப்பெற்ற 121, 122, 123, 124ஆம் பாடல்களும், பேரி சாத்தனாரால் பாடப்பெற்ற 125ஆம் பாடலும், மாறோக்கத்து நப்பசலையாரால் பாடப்பெற்ற 126ஆம் பாடலும், பெருஞ் சித்திரனாரால் இயற்றப்பெற்ற 158ஆம் பாடலும் திருமுடிக்காரியைப் பற்றிய செய்திகளைத் - தெரிவிக்கின்றன.

மேலே நான்கு நூல்களிலும் குறிப்பிடப்பட்டவற்றுள், பல பாடல்கள் முற்றிலும் திருமுடிக்காரியைப் பற்றியவை; சில பாடல்கள் இடையிடையே அவனை எடுத்தாண்டு ஒரு சிறிது அவனைப் பற்றிக் கூறுபவை.

மற்றும், ஓய்மானாட்டு நல்லியக் கோடனைப் பற்றி இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியுள்ள சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க நூலிலும் இடையிடையே (வரிகள் : 91 - 95; 107 - 110) காரியின் படை வீரமும் கொடை வீரமும் புகழ்ந்து பேசப்பட்டுள்ளன.

திருக்கோவலூர்

மலையமான்களின் தலைநகரான திருக்கோவலூர், அகநானூற்றில் அம்மூவனார் பாடியுள்ள 35ஆம் பாடலிலும், புறநானூற்றில் ஒளவையார் பாடியுள்ள 99 ஆம் பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளூர்

மலையமான்களின் இன்றியமையா இடங்களுள் (முக்கியக் கேந்திரங்களுள்) முள்ளூர் என்னும் ஊரும் ஒன்று. அங்கு மலையும் உண்டு, இந்த முள்ளூர், நற்றிணையில் ஆசிரியர் பெயர்