பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

兹了2上 தொல்காப்பியம்-பொருளதிகாரம் -உரை வளம்

என்னாது வெறியாடும் வேலன் விரும்பிச் சூடும் பூவின் பேரால் காந்தளெனக் குறிக்கப்பட்டது. எனவே வேலன் வெறியாட்டு குறிஞ்சிக்கும் வெட்சிக்கும் பொதுவாயினும், வெட்சித்துறை வெறியாட்டில் வேலன் காந்தள் சூடி ஆடுவன்; குறிஞ்சித் துறை யில் வெறியாடும் வேலன் குறிஞ்சிப்பூ சூடுதல் மரபு. இதனை மதுரைக் காஞ்சியில் புறத்தில் அகத்துறையாக, அருங்கடி வேலன் முருகொடு வளை இ அரிக்கூடு இன்னியம் கறங்க நேர் நிறுத்துக் கார்மலர்க் குறிஞ்சி சூடி எனவரும் அடிகளானுமறிக."

(2, 3, 4) உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்து புகழ்ப் போந்தை, வேம்பே, ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்-மாறுகொண்ட இருவேந்தர் பெரும் படை மறவர் தம்மை மலைவின்றித் தமரும் பிறரும் எளிதில் அறியும் வண்ணம் அடையாளமாகச் சூடும் சேரரது பனை, பாண் டியரின் வேம்பு, சோழர்தம் ஆத்தி என முறையே புகழோங்கி வரூஉம் பூக்களின் பேராலாய துறை மூன்றும்,

இரும்பனம் போ ந்தைத் தோடும் கருஞ்சினை அ வாய் வேம் பின் அங்குழைத் தெரிய லும், ஓங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் ஒருகளத் தவிய வெண்ணித் தாக்கிய வெருவரு தோன்ற ஸ் கண் ஆர் கண்ணிக் கரிகால் வளவன் எனவரும் பொருநராற்றுப்படை அடிகளில் போந்தை 'வேம்பு 'ஆர்' எனும் அடையாளப்பூ மூன்றும் அமரில் சூடும் பரிசு குறிக்கப் படுதல் காண்க.

(3) வாடா வள்ளி-வாடுங்கொடி யல்லாத வள்ளி யென்னும் பெயருடைய கூத்தும்.

(வள்ளி' என்பது வாடும் ஒரு கொடிக்கும் ஆடும் ஒருவகைக் கூத்துக்கும் பொதுப் பெயராதலால், (ஓடாப் பூட்கை) வாடா வஞ்சி, என்பன போல, கொடியை நீக்கிக் கூத்தைச் சுட்டும் பொருட்டு இங்கு "வாடா வள்ளி' எனக் கூறப்பட்டது)

1. அகத்திலும் புறத்திலும் வெறியாட்டு நிகழ்த்துவோன் வேலன் ஆயினும் அகமாகிய குறிஞ்சித்தினை வெறியாட்டிற் சூடும்பூ குறிஞ்சி மலர் எனவும் புறமா கிய வெட்சித்தினை வெறியாட்டிற் சூடும் பூ, காந்தள் எனவும் இலக்கியம் காட்டிப் பகுத்துணர்த்திய திறம் பாராட் டத் தகுவதாகும், .