பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி இ! தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

யின் அருள் நிலையைக் கூறுதலும் ஆகிய இவையிரண்டும் முற்கூறிய குறிஞ்சியென்னும் அகத்திணையின் புறனாகிய வெட்சித் திணையின்பாற் படும். எ று.

மறக் குடியிற் பிறந்த ஆடவர் மகளிர் என்னும் இருபாலர்க்கும் உரிய பொது இயல்பினைக் குறிப்பதாக அமைந்தது குடிநிலை: என்னுந் துறையாகும். குடிநிலை என்றதனால் மைந்தர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதல் அறிக. இவற்றுள் ஆண்பால் பற்றி வந்ததனை இல்லாண் முல்லை எனவும் பெண்பால் பற்றி வந்த தனை மூதின்முல்லை எனவும் கூறுட' என இளம்பூரணர் தரும் விளக்கம்,

“கழுமிய காதற் கணவனைப் பழிச்சி இழுமென் சீர்த்தி இன் மலி புாைத்தன்று'

(பு. வெ. மா. பொதுவியற்படலம் இல்லாண் முல்லை.) எனவும்,

“அடல்வே லாடவர்க் கின்றியும் அவ்வில் மடல் வான் மகளிர்க்கு மறமிகுத் தன்று:

(மேற்படி-வாகை-மூதின் முல்லை) எனவும் ஐயனாரிதனார் கூறும் இல்லாண் முல்லை மூதின் முல்லை என்னுற் துறைகளின் விளக்கங்களை அடியொற்றியமைந்ததெனக் கருதவேண்டியுளது. எனவே இல்லாண் முல்லை என்னுந் துறைப் பெயரினை இல் ஆண் முல்லை எனப் பகுத்து மறக்குடியிற் பிறந்த ஆண் மகனது இயல்பு' எனப் பொருள் கூறுதலே இளம்பூரணர் தரும் விளக்கத்திற்கு ஏற்புடையதாகும்.

சேயோன் மேஎய மைவரையுலகத்துக்குச் சிறப்புரிமையுடைய குறிஞ்சித்திணைப் புறனாகிய வெட்சிக்குரிய துறைகளுள் சிறந்த கொற்றவை நிலை என்னுந் துறையினையும் ஒன்றாகத் தொல் காப்பியனார் கூறுதலால் குறிஞ்சித் திணைக்கு முருகவேளேயன்றி (அவனுக்கு அன்னையாகிய) கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம் என்றார் இளம்பூரணர். வெற்றிவேல் போர்க் கொற்றவை சிறுவ' எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடர் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

புறப்பொருள் வெண்பாமாலை வெட்சிப்படலத் துறைகள் தொல்காப்பியனார் குறித்த வெட்சித் திணைத்துறைகளை அடி யொற்றியே அமைந்துள்ளன. வெண்பாமாலையிலுள்ள வெட்சித் துறைகளுள்,