பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-எ :מ :

அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு" தொகைஇ - மாற்றார் விடுபடைக்கலன் முதலியனவற்றைத் தம்மாட்டுத் தடுத்து உளன் அழிந்தோர்ப் பேணித்தழுவிக்கோடலொடு தொகுத்து எண்ணின்.

இத்துணையும் கூறப்பட்டது வஞ்சி.

'உர வரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி அறிந்தனை அருளார் ஆயின் யாரிவண் நெடுந்தகை வாழு மோசே (பதிற்றுப். எக) என்பதும் இதன்கண் அடங்கும். இது முதுமொழி வஞ்சி.”

கழி பெருஞ் சிறப்பின் பதின்மூன்று துறை - மிகப் பெருஞ் சிறப்பையுடைய பதின் மூன்று துறைத்தாம்.

வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்த ஏனையவெல் லாம் இரு திறத்தினர்க்கும் பொதுவாக நிற்றலின் கழிபெருஞ் சிறப்பெனக் கூறினார். இன்னும் 'கழிபெருஞ்சிறப்பின் என்ற மையின், பேரரசர் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலிவெய்திப் பாசறை நிலை உரைத்தலும் பிறவும் கொள்க. இவைபற்றியன துணைவஞ்சி. நீயே புறவின் அல்லல்' (புறம். சசு) வள்ளியோர்ப் படர்ந்து' (புறம், சன்) என்னும் புறப் பாட்டுக்களில் காண்க. பிறவும் அன்ன. (எ) நச் : இது முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்று துறைத் தென்கின்றது.

(இ-ஸ்.) இயங்கு படை அரவம்-இயங்குகின்ற இருபடை யெழுச்சியின் ஆர்ப்பரவமும்:

7. தழிஞ்சி-போரிற் புண்பட்ட வீரரைத் தளர்வகற்றித் தழுவிக் கொள் ளுதல்.

8. முதுமொழிவஞ்சியாவது, பழைய வரலாற்றினையுடையராய் வாளேந்திப் போர்புரியும் மறக்குடியினரது போர்ப்பண்பினைப் புலப்படுத்தும் துறையாகப் புறப்பொருள் வெண்பாமாலை வஞ்சிப்படலத்தில் இடம்பெற்றுள்ள புறத்து) யாகும்.

9. இயங்குபடையரவம் முதல் தழிஞ்சியீறாத வஞ்சித்தினைக்குரியனது, எண்ணப்பட்ட பதின்மூன்று துறைகளில் வென்றோர் விளக்கம், தோற்றோர் தேய்வு, கொற்றவள்ளை என்னும் மூன்றும் நீங்கலாக ஏனைய பத்தும் இருதிறத் தினர்க்கும் பொதுவாக நிற்றலின், கழிபெருஞ்சிறப்பின் துறை என அட்ைபுன்ச்த் தோதினார் என்பர் இளம் பூரணம்.

10. பேரரசர் தமக்குத் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலி வெய்திய பாசறை நிலையு ை த்தல் துணை வஞ்சியாம்என் பதும் தியே ւ ոտն னல்லல் (சசு) வள்ளியோர்ப்படர்ந்து' (சிஎ) என வரும் புறநானு ற்றுப் பாடல்கள் துணை வஞ்சிக்கு உதாரணமாம் என்பதும் இளம் பூரண ர் கருத்தாகும். இளம் பூர ைரும் புறநானூற்று உரையாசிரியரும் கூறும் துணை வஞ்சி என்றதொரு துறை, முன்னு லாகிய தொல்காப்பியத்திலும் பின் வந்த புறப்பொருள் வெனி): மாலையிலும் இடம் பெறவில்லை. எனவே துணை வஞ்சி என் , துறையைக் கூறும் புறப்பொருளிலக்கண நூல் எதுவென்பது ஆராயத் தகுவதாகும்.