பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா க0 &版一莎·

இவை எட்டும், பிறர்சுறுமாறு துறைகளாக உழிஞைத்துறை பன்னிரண்டும் அடுத்த சூத்திரம் கூறுதலால், இவ்வெட்டும் உழிஞைத்திணை வகையெனத் தெளிக.

ஆய்வுரை

நூற்பா. )

இஃது உழிஞையின் நாலிருவகையினையும் விரித்துரைக் கின்றது.

(இஸ். பகைவரது நாட்டினைத் தான் வென்று கைக் கொள்வதற்கு முன்னமேயே தான் விரும்பிய வண்ணம் வேண்டிய வர்க்கு அந்நாட்டினைக் கொடுத்தலை விரும்பிய வெற்றித் திறமும், அங்ங்னம் தான் எண்ணியதனை எண்ணிய வண்ணமே முடிக்கவல்ல வேந்தனது பேராற்றலின் சிறப்பும், நெடுங்காலமாக அழிவின்றி நிலைபெற்றுள்ள மதிலின்மேல் ஏறிப்போர்செய்தலும், (மதிலின் அகத்திலிருந்து மாற்றார் எய்யும் அம்புகளைத் தடுத்தல் வல்ல) கிடுகுப்படையினையேந்திய மறவர்களின் மிகுதியும, (புறத்தோன்திறமாகிய) அதுவேயன்றி அவனொடு முரணிப்போர் புரியும் அரணகத்துள்ள வேந்தனது செல்வமிகுதியும் அம்மிகுதி யால் தன்னொடுமாறுபட்ட புறத்தோனைப் பொருது அகத்தோன் வருத்திய கூறுபாடும், ஆற்றல்மிக்குத் தானொருவனுமேயாகிக் கிளர்ந்தெழுந்து மதிற்புறத்தே போந்து போர் புரியும் குற்றுழி ஞையும் வெகுண்டு எயிலை அழித்தற்கு முந்தும் புறத்தோரது படையினைப் பொருட்படுத்தாது இகழ்ந்திருத்தற்கேற்ற அரிய வினைத்திறம் வாய்ந்த மதிலின் வன்மையும் உட்பட (புறத் தோற்கு நான்கும் அகத்தோற்கு நான்கும் என இருதிறமாகச்) சொல்லப்பட்ட எட்டு வகையினையுடையது அவ்வுழிஞைத்திணை என்பர் ஆசிரியர்.

இவற்றுள் முன்னைய நான்கும் மதிலை வளைத்துக்கொண்ட வேந்தனாகிய புறத்தோனுக்குரியன; பின்னைய நான்கும் மதிலழி யாமற் பற்றிக்கொண்டு காக்கும் அகத்தோனுக்கு உரிய செயல் வகைகளாம் என்பார் சொல்லப்பட்ட நாலிரு வகைத்தே என மீண்டும் தொகை கூறினார் ஆசிரியர்,