பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கங் கடுங்.

நிலை எனற்குமமையாது. அதனால், இருபாற்பட்ட எனுந்தொடர் அதை யடுத்துவரும் ஒரு சிறப்புக்கே அடையாதல் தேற்றம்) நின்ற யாக்கை, நிலந் தீண்டா உறுப்பு அருநிலை, என முறையே இரு திறப்பட்ட ஒரு சிறப்பாதல் காண்க.

வெற்றுடலும் அற்றதலையும் நிலந்தீண்டா நிலைக்குச் செய்யுள்:

வருபடை தாங்கிய கிளர்தா சகல மருங்கட னிறுமார் வயவ செறிய உடம்புற் தோன்றா வுயிர்கெட் டன்றே: மலையுநர் மடங்கி மாறெதிர் கழிய... முலையா நிலையி னுடல்தின் றன்றே’’’ - புறநானூறு. க

இது, சென்ற உயிரின் நின்ற யாக்கை இருநிலந் தீண்டா அருநிலை குறிப்பது.

இனி, "கொடுமணம் பட்ட' எனும் பதிற்றுப்பத்துப் பாட்டில்,

'தலைதுமிந் தெஞ்சிய வாண்மலி யூபமொ டுருவில் பேய் மகள் கவலை கவற்ற' -பதிற்று. சு.எ

என்பதும்,

சிலப்பதிகாரக் கால்கோட் காதையில்,

"தாரும் தாருந் தாமிடை மயங்கத் தோளும் தலையுந் துணிந்து வேறாகிய சிலைத்தோள் மற வ ருடற்பொறை யடுக்கத் தெறியின மிடறிய குறையுடற் கவந்தம்

பறைக்கட் பேய்மகள் பாணிக் காட’’

எனவரும் அடிகளும், இருநிலம் தீண்டாத் துணியுறுப் பருநிலை குறிப்பன.

1. அட்டை என்பது நீரிலேயே வாழும் இயல்பின தாதலின் இருநில ந் தீண்டா அரு’ எனப்பட்டது.

2. உலையா நிலையின் உயிர் நின்றன்றே : (புறம்) என்பது சென்ற வுயிரின் நின்ற யாக்கை.

茄 5 கை