பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உடு 之_安夺

(1) முதலில் "வண்ணப்பகுதி' என்பது செந்துறைப்பாட்டின் இன்னோசை வண்ண வகையைச் சுட்டுவதன்றி, ஒருவர் பிறந்த வருணவகை குறியாமை வழங்கியல் மருங்கின்' எனு மேற் சூத்திரக் குறிப்புரையில் விளக்கப்பட்டது. ஆண்டது பாடாண் தலைமக்களின் குலப்பிறப்பைச் சுட்டாமை ஒருதலை. அன்றியும், 'வருணம் பொதுவாக ஆரியநூற் சாதியாவதன்றி, ஒருவரின் உயர் குடிப்பிறப்பாகாது. பாடானா தற்குத் தலைமக்களின் உயர்குடிப் பிறப்பே உரித்தாமன்றி, வாளாவருண வகைசுட்டல் போதாது. பிறப்பளவில் சிறப்புச் சொல்லி இறுமாக்கும் வருண வகை பழைய தமிழ்மரபுமன்று. “ஆன்றகுடிப் பிறப்பே வேந்தவாம் பண்பாகத்' தமிழறநூல் கூறும். ஆதலின், இதிற் பொலிவு சுட்டும் தோற்றச் சொல், பீடுடைய தலைமக்கள் பிறந்த குடிப் பெருமையைக் குறிப்பதல்லால், வேதங்கூறும் சாதியைச் சுட்டாது.

(2) இனி, ஊரும் பெயரும்” எனு மரபியற் சூத்திரம் நுதலும் பொருளும் இடஇயைபும் வேறு; அச்சூத்திரமே இடைச் செருகல் என்பாருமுளர். இன்னும், பின் மரபியற் சூத்திரம் ஊர் குறிப்பதால் ஈண்டைக்கேற்ற ஊர் கொள்ளலாகாதெனின், ஆண்டுப் பெயரும் மரபியற் சூத்திரம் சுட்டுவதால் இங்கிப் பகுதி யில் பெயர் குறிப்பதும் பிழையாதல் வேண்டும். அதற்கு மாறாகப் பாடாண் தலைமக்களின் பெயர் கூறப்பெறுமென்பது இதை யடுத்து மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே’’ எனக் கூறப்படுகிறது. ஆகவே, பாடாண் தலைவரின் ஊரும் உயர்குடிப் பிறப்பும் பெயருமே அத்திணைப் பகுதியில் கூறுதல் மரபென்பதே இதுவும் இதையடுத்த பின் சூத்திரமும் விளக்கும் பொருளாதல் தேற்றமாகும். தலைமக்கள் அகத்தினைப் பகுதியில் 'சுட்டி யொருவர் பெயர் கொளப் பெறார்’ என விலக்கியதால், புறத்தில் புரைதீர் காமம் புல்லிய பாடாண் பகுதியில் அவர் ஊரும் குடிப் பிறப்பும் பெயரும் சுட்டுதல் விலக்கின்றென்பதை ஈண்டைக்கேற்ப இப்புறத்திணையியலில் இயையக் கூறினர் இந்நூலார்.

இதற்கிளம்பூரணர் உரையும் சிறவாது, 'ஊரொடு தோற்றம்' என்பது, பேதை முதலாகப் பேரிளம் பெண்ணிறாக வருவன’’ என்றவர் கூறினர். மலைகலங்கினு நிறைநிலைகலங்காத் தமிழ் மகளிரெல்லாம் ஒரே திலனுலவில் உயிரினும் சிறந்த தம் நாணினுஞ் சிறந்த கற்பிழந்து காமவெறி கொள்ள வைத்துப் பழி பிறங்கும் பிற்காலப் பிரபந்தங்களை அமைப்பதற்கு இப்பொருள் கொண்டார் போலும். நிறையுடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு