பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினையியல் நூற்பா கக 色一历~卤

பெயர்த்த மனைவி வஞ்சி யானும் நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும் முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டான் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந் தாகும் என்ப பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல் மயக்கத் தானுந் தாமே எய்திய தாங்கரும் பையுளும் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்த மும் நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும் கழிந்தோர் தேளத்துக் கழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் காதலி இழந்த தபுதார நிலையும் காதலன் இழந்த தாபத நிலையும் நல்லோள் கணவனொடு நளிையழல் புஇேச் சொல்லிடை இட்ட பாலை நிலையும் அரும்பெருஞ் சிறப்பிற் புதல் வற் பயந்த தாய்தய வரூஉந் தலைப்பெயல் நிலையும் மலர்தலை உலகத்து மரபு நன்கு அறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த் தொடு நிறையருஞ் சிறப்பின் துறையிாண்டு உடைத்தே. இளம் : இது காஞ்சித்துறையாமாறு உணர்த்துதல் துதலிற்று.

(இ~ள்.) மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை முதலாகத் 'தலையொடு முடிந்த நிலையொடு கூடப் பத்தாகும். என்பர் சிலர். பூசல் மயக்கம் முதலாகக் காடுவாழ்த்து உட்பட வருவனவற்றோடும் இருவகைப்பட்ட துறையை உடைத்து.

(எனவே, முற்கூறிய பத்தும் ஒருவகை யென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொரு வகை யென்பதும் பெறப்பட்டன.)

மாற்று அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்-மாற்றுதற்கு அரிய கூற்றம் வருமெனச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும்.

1. மாற்ற அருங்கூற்றம்-யாவராலும் தடுத்து விலக்கு தற்கு அரிய கூற்றம். உடம்பினின்றும் உயிரைக்கூறுபடுத்தின் பிரித்தலின், கூற்றம் என்பது இயமனுக்