பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பாகச க3

இளம்பூரணம் :

14. தானை யானை குதிரை என்ற

நோனார் உட்கும் மூவகை நிலையும் வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய பெருமையும் படையறுத்துப் பாழி கொள்ளும் சமத் தானும் களிறெறிந்து எதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும் வாள்வாய்த்து இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும் செருவகத்து இறைவன் வீழ்வுறச் சினை.இ ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும் பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. இஃது தும்பைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் துதலிற்று.

(இ-ள்.) நோனார் உட்கும் தானை யானை குதிரை என்ற மூவகை நிலையும் பகைவரால் உட்கப்படுகின்ற தானையும் யானையும் குதிரையுமாகிய மூவகைப்பட்டவற்றினது நிலையும்.

வேல்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான்மீண்டு எறிந்த தார் நிலையும்’-வேல்வென்றி மிகலையே கண்ணோக் குடையனாய்க் களத்து முகப்பிற் சென்ற வேந்தனை மாற்றார் குழ்ந்த இடத்து வேந்தன் பாவினனாய மற்றொரு தலைவன் தன் நிலை விட்டுத் தன்வேந்துமாட்டு அடுத்துத் துணையாய் மாற் றாரை எறிந்த தார்நிலையும்.

1. வீழ்ந்தெனச்

2. ஒருவன்

3. நோனார்-பகைவர்.

மூவகை நிலைகளாவன தானை நிலை; யானை நிலை, குதிரை நிலை என்பன.

悠 தத்-தாசிப்படை, மு ன்னணிப்படை, போர்க்களத்து முகப்பாகிய முன்ன ணிையிற்சென்று பொருதலின் தார்நிலை என்னும் பெயர்த்தாயிற்று. - -