பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-5 Cು தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

உயர்ந்தவெல்லை மூவகை வருணத்தாரும் இருபிறப்பாளராகின்ற பருவமாம், வேளாளர்க்கும் மூவகையோர்க்குரிய பருவமே கொள்க. குழவிப்பருவங் கழிந்தோர் அது வேண்டியக் காலும் அக்குழவிப்பருவமே கருதிப் பாடுக வென்றற்குக் கிழவதாகு மென்றார். இதற்குப் பரிசில்வேட்கை அக் குழவிக்கனன்றி அவன் தமர்க்கண்ணுமாமென் றுணர்க.

உதாரணம் :

அன்னா யிவனொருவ னந்தரத்தா னானென்றான் முன்ன மொருகான் மொழியினான்-பின்னுங் கலிகெழு கூடலிற் கண்குரீடி வந்து புலியாய்ப் பொருவான் புகும்' அந்தரத்தானா னென்றான் அம்புலி வேறாயும் ஒருகாலத்தே விளையாட்டு நிகழ்த்துமென, மதுரையிற் பிட்டுவாணிச்சி மகற்கு மங்கலக் குறிப்பாற் சான்றோர் கூறியது. (உகூ)

பாரதியார்

கருத்து :- இது, புரைதீர்காமம் புல்லிய வகைத்தாய பாடாண் திணைப்பகுதி மிக்கிளஞ் சிறார்மாட்டும் சார்த்திப் பாடப்பெறுமென்று கூறுகிறது.

பொருள் :- குழவிமருங்கினும்-காமஞ்சாலார் சிறாரிடத் தும்; கிழவதாகும்-புரைதிர்காமம் புல்லிய பாடாண் புலனெறி வழக்கிற் குரியதாகும்.

குறிப்பு :- உம்மை சிறப்புக் குறிப்பது. காதற்செவ்வி கருத வொண்ணாப் பேதைப் பருவச் சிறார் மாட்டும் நற்காமப் பாடாண் திணை புலனெறி வழக்காற்றில் உரிமைகொள்ளும் என்பது கருத்து. காமவுணர்வு குழவிக்கின்றெனினும்: அக்குழவி மாட்டுத் தூயகாதல் கொள்வாரன்புப் பெற்றி பற்றிய பாடாண் அக்குழவியர்மேல் சார்த்தி வருவதே இதிற் கூறப்படுவது. காமப் பருவமுடையார் சிறாரைக் காதவிக்குங் கைக்கிளைப் பாடாண் புரைதீர்காமம் புல்வியபாடாணா யடங்கும் பெற்றி மேலே கூறி ன்ார். அத்துரய காதலால் குழவியர்பாற் சாரும் பாடாண் பகுதியை இங்குக் கூறினார்; அதனாலிது கூறியது கூறலாகாது. இதற்குச் செய்யுள் வருமாறு :

'பொன் திகழ்தன் மார்பென் புறந்தோயச் சாய்ந்தென்கண் தன்காந்த னாற்பொத்தித் தான்சிரிக்கும்-முன்வந்தென் கன்னத்தை முத்திக் கழுத்தைக்கை யாற்றழுவும் என்னத்தன் என்வாழ் வினி.'