பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கட0 范一斑一任一

30. தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயில்ைைட நிலையும் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயன் எதிசச் சொன்ன பக்கமும் சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெருமங் கலமும் சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும் நடைமிகுத்து ஏத்திய குடைநிழல் மரபும் மாணார்ச் சுட்டிய வாள்மங் கலமும் மன்னயில் அழித்த மண்ணுமங் கலமும் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும் அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் காலங் கண்ணிய ஓம்படை உளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு கண்ணிய வருமே.

இளம் : இதுவும் அது (இ.ஸ்) துயிலெடைநிலை முதலாகப் பரிசில் விடை’ ஈறாகச் சொல்லப்பட்டனவும், நாளும் புள்ளும் நிமித்தமும் ஒம்படையும் உட்பட்ட உலக வழக்கின் அறியும் மூன்று காலமும் பற்றி வரும் பாடாண்திணை என்றவாறு.

கிடந்தோர்க்கு தாவில் நல்இசை கருதிய சூதர் ஏத்திய துயில் எடை நிலையும்.கிடந்தோர்க்குக் கேடு இல்லாத நற்புகழைப் பொருந்தவேண்டிச் சூதர் ஏத்திய துயில் எடைநிலையும்."

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறிஇ சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்-கூத்தராயினும் பாணரா யினும் பொருநராயினும் விறலியாயினும் நெறியிடைக் காட்சிக்

1. கிடத்தல்-உறங்குதல். சூதர்-நின்றேத்துவோர். துயிலெ.ை--

துயிலினின்றும் எழுப்புதல்.

2. உறழ்தல்-ஒன்றிற்கொன்று மாறுபடுதல். பயன்எதிர-பயனைப்பெற. 3. எதிர்தல் - ற்றுக்கொள்ளுதல் .