பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-சு శ్రీః శ_

நல்லதெனச் சொல்லவரும் அல்லல்சளுக் கெல்லையில்லை' என்பதன் உண்மையை இவர் சிறப்புரைச் செய்திகள் வலியுறுத்து கின்றன. தணியாத மண்ணசையால் மெலியார் நாட்டை வலியார் வெளவுவது மன்னறமென்னும் ஆரியக் கொள்கையே வஞ்சித் திணையெனக் காட்டப் புகுந்து, அதை நாட்டஎழுதும் சிறப்புரையில் எழுகின்ற இடர்ப்பாடுகளைக் கருதுகின்றிலர்.

1. முதலில், படையொடு செல்லும் வேந்தனை மெலியார் மண்ணில் எஞ்சா நசையால் வஞ்சி சூடினான் எனக் கூறி அவனைத் தவறுடையனாக்குங் குற்றம் மேலே குறிக்கப்பட்டது.

2. இனி, எஞ்சா மண்ணசை' எனும் தொடரை நின்றாங்கே அதை அடுத்த வேந்தனை எனும் செயப்படு பொருளாகிய இரண் டாம் வேற்றுமைச் சொல்லுக்காக்காமல், அதைத் தாண்டிப் பின் வரும் வேந்தன் எனும் எழுவாய்ச்சொல்லுக்கு அடையாக்கிப் பிறர் மண்ணாசையே போரற நோக்கம் எனும் ஆரியக் கொள்கையைப் புகுத்தலாயினர். எனின், மூலத்தில் எஞ்சா மண்ணசைவேந்தனை எனச் சொற்றொடர் நிற்பதால், மண்ணசையைப் படைஎடுக்கப் படும் வேந்தனுக்கு அறவேயில்லாமல் விலக்குமாறில்லை. வலிதிற்றம் நாட்டை வெளவவரும் பிற வேந்தனைத் தன் மண் காக்க அதற்குரியான் எதிர்ப்பது இயலறமாகவும் அவ்வாறு எதிர்க்கும் அவன் தற்காப்புமுயற்சியும் மண்ணசை காரணமான வஞ்சியாகும் என இவ்வுரைகாரர் தம் சிறப்புரையில் வற்புறுத்தி னார். இதிலெழும் முரண்பாடுகளை அவர் கருதுகிலர். படை யொடு வந்த பகை வேந்தனை எதிர்த்துத் தன் மண் காப்பது அறமென்று கூறும் இவரே அத்தற்காப்புப் போர் முயற்சியும் மண்ணசையால் மேற்செரும் வஞ்சியாம் என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? தன்னாடு கவரவரும் பகைவனை எதிர்ப்பது அறக் கடனாகுமன்றி மண்ணாசைக் குற்றமாகாதன்றே. பிறர்மண் வேட்கையைக் குற்றமெனக் கொள்ளாமல் மன்னருக்கு நல்லற மென்று சொல்லப் புகுவதால், இவ்வாறு வந்த பகைவனை எதிர்க் கும் தற்காப்பறப்போரையும் மண்ணசைப் போரென முறைமாறிக் கூற நேர்ந்தது.

3. மேலும் தன் நாடு கவர வந்தானைத் தற்காப்பின் பொருட்டுத் தகைப்பதை வஞ்சியெனக் கூறினதுமன்றி, மேற் சென்றானையும் எதிரூன்றினானையும் ஒருசேர வஞ்சித் தலைவ ராக்கினர். இது, வஞ்சி-மேற்செலவு எனத் துணிந்த தமிழ் இலக்கணத்தையே தடுமாறச் செய்யுந் தவறாகும். வலிகருதி