பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கள 空一öG了

கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை யீரச் செறுவிற் றேரே சாக விடியல் புக்கு நெடிய நீட்டி நின் செருப்படை மிளிர்த்த திருத்துறு செஞ்சாற் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெரு வருபைங்கூழ் பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர் 乐魔5擎 நரியோடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழிஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள தேய்வை வெண்காழ் புசையும் விசிபிணி வேய்வை காணா விருந்திற் போர்வை யரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வருந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன் வோடை துகல வொல்குத லறியாத் துடியடிக் குழவிப் பிடியடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தகை வெய் யோயே (புறம்-சுக)

எனவரும்.

“நளிகட லிருங்குட்டத்து' என்னும் (உசு) புறப்பாட்டுப் பலி கொடுத்தது.

தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்-தேரின் கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப் பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கைபிணைத் தாடுங் குரவையானும்;

ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும்-தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடும் குரவையானும்:

பெரும்பகை தாங்கும் வேலினானும்-போர்க்கனன்றியும்

பெரியோராகிய பகைவரை அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் வன்மையானும்:

1. பெரும்பகை-பெரியரோகிய பகை. தாங்குதல்-தடுத்தல்.