பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம் التي ست سنة

கண்ணே எதிர்ந்தோர் உறழ்ச்சியால் தாம் பெற்ற பெருவளன் துமக்குப் பறலாகும் எனவும் சொன்ன பக்கமும்.

'பக்கமும்’ என்றதினான், ஆற்றினது அருமையும் அவன் ஊரது பண்பும் கூறப்படும். அவற்றுள்,

சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெரு மங்கலமும்-சிறந்த நாட்கண் உண்டாகிய செற்றத்தை நீக்கிப் பிறந்த நாட்கண் உளதாகிய பெருமங்கலமும்.

சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும்’-ஆண்டுதோறும் முடி புனையும் வழி நிகழும் மிகப்புண்ணிய நீராட்டு மங்கலமும். இதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க.

நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்-ஒழுக்கத்தை மிகுத்து ஏத்தப்பட்ட குடை நிழல் மரபு கூறுதலும்.

மாணார்ச் சுட்டிய வாள் மங்கலமும்-பகைவரைக் கருதிய வாள்மங்கலமும் .

மன் எயில் அழித்த மண்ணு மங்கலமும்’-நிலைபெற்ற எயிலை அழித்த மண்ணு நீராடு மங்கலமும்.

இஃது உழிஞைப் படலத்துக் கூறப்பட்ட தாயினும் மண்ணு நீராடுதலின் இதற்கும் துறையாயிற்று. இவ்வாறு செய்தனை எனப் புகழ்ச்சிக்கண் வருவது பாடாண் திணையாம். இவ்வுரை மறத்துறை ஏழற்கும் ஒக்கும். உதாரணம் வந்தவழிக் காண்க.

பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்-பரிசில் கடாவு தலாகிய கடைக்கூட்டு நிலையும்.

இன்னும் இதனானே, பரிசில்பெறப் போகல் வேண்டுமென் னும் குறிப்பும் கொள்க.

+ 1. சீர்த்தி-மிகு புகழ். மண் ணுதல்-நீராடுதல். மண்ணுமங்கலமாவது புண்ணிய நீராட்டுமங்கலுமாம். அரசர் நாட்டின் ஆட்சியினையேற்று gಿ நன்னாளினை ஆண்டுதோறும் கொண்டாடும் நிலையில் நிகழ்வது, மண்ணு ೧ುಹ66 என்னும் இந்நிகழ்ச்சியாகும் என்பது இளம்பூரண ருரையால் இனிதுபுலனா தல காணலாம.

2. பகைவரது எயிலையழித்து அ வ்விடத்து நீராடும் மங்கல நிகழ்ச்சியாகிய மண்ணுமங்கலம் என்பது, உழிஞைத் திணையிற் கூறப்பட்டதாயினும் இத்தகைய போர்ச் செயலை நிகழ்த்தி வெற்றி தொண்டானை எனவேந்தனைப் புகழ்தற் கண் வருதலின் பாடாண்டிணையாயிற்று என்பதும், இங்iனம் பிற புத் தினைக்கு உரிய நிகழ்ச்சிகள் புகழ் தற் பொருள்படவரின் பாடாண் தினையாதல் மறத்துறை ஏழிற்கும் ஒக்கும் என்பதும் இளம்பூரணர் கருத்தாகும்.

3, மறத்துறை ஏழாவன: நிரைகவர்தல், நிரைமீட்டல், மேற் சேறல், எயில ழித்தல், எயில்க்த்தல், இரு திறத்தாரும் பொருத்ல், வேறல் என்பன்விங்'இல்ெ முறையே வெட்சி, காந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை என்னும் திணை நிகழ்ச்சிகளாகும் ,