பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உச் 2.岛岛,

செய்யும் இலக்கணமாக இத்தொல்காப்பிய நூற்பா அமைந் துள்ளமை உய்த்துணரத்தகுவதாகும்,

24. குழவி மருங்கினும் கிழவ தாகும். இளம் : இது, குழவிப் பருவத்தும் காமப்பகுதி பாடப்பெறும் என்பது உணர்த்துதல் நுத லிற்று.

(இஸ்.) குழவி மருங்கினும் கிழவது ஆகும் - குழவிப் பருவத்தும் காமப்பகுதி கூறல்பெறும் (அவர் விளையாட்டு மகளி ரொடு பொருந்தியக்கண்)

உதாரணம் ' வரிப்பந்து கொண்டொளித்தாய் வாள்வேந்தன் மைந்தா அரிக்கண்ணி அஞ்சி அலற-எரிக்கதிர்வேல் செங்கோலன் துங்கோச் சினக்களிற்றின் மேல்வரினும் எங்கோலம் தீண்டல் இனிது.' (புறப். டாடாண். இ0) நச்சர் :

9_ö இது முன்னிற்குத்திரத்திற் பக்குநின்ற காமத்திற்கன்றிப் 'புரைதீர் காமத் (தொல்-புறத்திணை-உசு) திற்குப் புறனடை கூறுகின்றது.

(இ.ஸ்.) குழவிமருங்கினும் கிழவதாகும்-குழவிப் பருவத்துங் காமப்பகுதி உரியதாகும் எ-று.

மருகென்றதனான் மக்கட்குழவியாகிய ஒருமருங்கே கொள்க: தெய்வக்குழவி யின்மையின். இதனை மேலவற்றோ டொன்றாது வேறு கூறினார், தந்தையரிடத்தன்றி ஒரு திங்களிற் குழவியைப் பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையுங் தாலுஞ் சப்பாணியு முத்தமும் வரவுரைத்தலும், அம்புலியுஞ் சிற்றிலுஞ் சிறுதேருஞ் சிறுபறையுமெனப் பெயரிட்டு வழங்குதலானு மென்பது.

இப் பகுதிகளெல்லாம் வழக்கொடு சிவணிய; (தொல்-புறத் திணை-ங்க) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். இப் பருவத்துக்கு

1. கிழவது-உரியது. கிழவது என்னும் பயனிலைக்கு எழுவாயாக முந்திய து ற் பாவிலுள்ள காமப்பகுதி என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது.

2. வழிபடுதெய்வம் தன்பால் அன்புடைய அடியார்கட்குக் குழந்தை முதலிய பல்வேறு வடிவில் தன்னருளால் வெளிப்படுதல் இயல்பாயினும் மக்களைப் போன்று, தாய் வயிற்றிற் பத்துத் திங்கள் தங்கிக் குழவியாய்ப் பிறந்து வருத லில்லையென்பது புலப்படுத்துவார், மக்கட் குழவியாகிய ஒருமருங்கே கொள்க, தெய்வக் குழவியின்மையின்’ என்றார். -

--20