பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 15 திரிசங்குவின் கதை துந்துபி என்ற அசுரனைக் கொன்ற குபலஷ்வாவின் மைந்தர்களில் ஒருவனாகிய திருதஷ்வாவின் பரம்பரையில் வந்த திரயருனி முறையான ஆட்சியை மேற்கொண்டான். ஆனால் அவன் மகனாகிய சத்யவிரதன் அவன் பெயருக்கு நேர்மாறாக நடந்து கொண்டான். அவன் கொடுமை அதிக மாகவே அவர்கள் குருவாகிய வசிட்டன், அரசனிடம் சொல்லி சத்தியவிரதனைப் பிரஷ்டம் செய்து நாட்டிற்கு வெளியே வாழுமாறு செய்தார். திரயருனி இறந்தவுடன் நாட்டை ஆள யாருமில்லை. பஞ்சம் பிடித்து உயிர்கள் இறக்கத் துவங்கின. இந்நிலையில் அந்நகருள் வாழ்ந்த விஸ்வாமித்திரன் தன் குடும்பத்தை விட்டுவிட்டுத் தவம் செய்யச் சென்று விட்டான். பசிக் கொடுமை தாங்காமல் விஸ்வாமித்திரர் மனைவி தன் மகனை விற்க முடிவு செய்தாள். எனவே அவன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டிச் சந்தைக்கு அழைத்துச் சென்றாள். பிரட்டனாக வெளியில் வாழ்ந்த சத்யவிரதன் அவனை விடுவித்து விஸ்வாமித்திரர் குடும்பத்தையும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டான். உண்பதற்கு ஏதும் இன்மையால் குல குருவாகிய வசிட்டன் பசுவைத் திருடி அதைக் கொன்று தானும் தின்று விஸ்வாமித்திரர் குடும்பத்திடமும் கொடுத்தான். இதை அறிந்த வசிட்டன் சத்தியவிரதனிடம் வந்து அவன் மேல் மூன்று குற்றங்களைச் சாட்டினார். முதலாவது குற்றம், தந்தை சொல் கேளாதது; இரண்டாவது குற்றம், பசுவைத் திருடியது: மூன்றாவது குற்றம், பசுக் கொலை புரிந்தது. இதனால் அவன் பெயர் முக்குற்றம் புரிந்தவன் என்ற பொருளில் 'திரிசங்கு என்றாயிற்று. தவத்தில் இருந்து மீண்ட விஸ்வாமித்திரர் நடந்த வற்றை அறிந்து திரிசங்குவை அரசனாக்கி ஆளச் செய்தார். இறுதியில் இந்த உடம்புடனேயே திரிசங்கு சொர்க்கம் செல்லத் தன் வரபலத்தால் ஏற்பாடு செய்தார் விஸ்வாமித்திரர்.