பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பதினெண் புராணங்கள் எதற்கு என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கொடுரமான காட்சியைக் கண்டேன். குளத்துக் கரையில் இரு சடலங்கள் கிடந்தன. அவர்கள் யார் என்று நான் பார்த்த பொழுது வியந்தேன். விமானத்திலிருந்து இறங்கிய அந்த இருவரின் முகம், அங்க அடையாளங்கள் அப்படியே அந்த சடலங்களில் இருந்தன. நான் ஆச்சரியப்பட்டுக் கொண் டிருக்கும்போதே மிகக் கொடுமையான செயல் ஒன்று நடந்தது. அந்தப் பெண், பெண் சடலத்தின் சில பகுதிகளை வெட்டித் தின்று கொண்டிருந்தாள். அந்த ஆண்மகன், அந்த ஆண் சடலத்தின் சில பகுதிகளை வெட்டித் தின்று கொண்டிருந் தான். திடீரென்று இரண்டு அழகிய பெண்கள் அங்கே வந்து இவர்கள் செய்யும் செயலைப் பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்தனர். பேய் வடிவம் கொண்ட இரு பெண்கள் ‘எங்களுக்கும் கொஞ்சம் கொடு’ என்று இவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். வெட்டிய தசையைத் தின்று முடித்தவுடன், கத்தியை வைத்து விட்டு அவ்விருவரும் விமானத்தில் சென்று விட்டனர். இந்தக் கொடுமையான நாடகம் தினமும் நடைபெறுகிறது. இதன் அடிப்படை எனக்கு ஒன்றும் புரியவில்லை. தாங்கள் இதனை விளக்க வேண்டுகிறேன். தந்தை ஆம் மகனே! இதன் அர்த்தம் எனக்குத் தெரியும். நான் சொல்வதை கவனமாகக் கேள். சோழநாட்டைச் சுவாகு என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் மனைவி பெயர் தார்க்ஷி, மன்னன் தன் குருவாகிய ஜைமினி முனிவரின் உதவியுடன் பல யாகங்களைச் செய்தான். ஒருநாள் ஜைமினி முனிவர் அரசனைப் பார்த்து, இந்த யாகங்கள் செய்வதைவிட அதிக புண்ணியம் தான, தருமம் செய்வதால் கிடைக்கும். ஆகவே, இவற்றைச் செய்வதைவிட என் போன்ற