பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 425 அமர்ந்திருக்கிறது. ம்ணிகள் பதித்த கிரீடத்தையும் அணிந் துள்ளது. காட்டுப் பூக்களால் கட்டப்பெற்ற மாலையை அணிந்திருக்கிறது. இந்த வடிவமே பரப்பிரம்மம் என்று சொல்லப்படும். பிரபஞ்ச உற்பத்தி பின்கண்டவாறு நடைபெற்றது. தொடக்கத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. தண்ணீர், காற்று எதுவுமில்லை. தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்த கிருஷ்ணன் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். இந்நினைவு வேறு எந்த வெளித் தூண்டுதலும் இல்லாமல் அவருள் எழுந்தது. கிருஷ்ணனின் வலப்புறத்தில் இருந்து நாராயணன் தோன்றினார். சத்தியம், நேர்மை என்பவற்றின் வடிவமாக அவர் இருந்தார். அவர் சங்கு சக்கரம், கதை, நீண்ட தடி, தாமரை, கெளஸ்துபம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தாங்கி இருந்தார். காட்டுப் பூக்களின் மாலையை அணிந்திருந்தார். நான்கு கரங்களுடன், பூரீவத்தவம் அணிந்த மார்புடன் காணப்பட்டார். கிருஷ்ணனின் புகழ் பாடிய நாராயணன், கிருஷ்ணனின் ஆணைக்குட்பட்டு எதிரே இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். கிருஷ்ணனின் இடப்புறமிருந்து, தாமச குணத்தின் வடிவுடையவராய், இருண்ட நிறமுடையவராய் சிவன் தோன்றினார். கையில் திரிசூலத்துடன், சடையில் பிறைச் சந்திரனையும், மூன்று கண்களையும் உடையவராய் இருந்தார். கிருஷ்ணனின் கொப்பூழில் இருந்து நீண்ட தாமரை வெளிப்பட, அத் தாமரையில் வெண்மையான உடையணிந்த முதிர்ந்த தோற்றத்துடன் ராஜச குணத்தின் வடிவாய் பிரம்மா தோன்றினார். நான்கு முகங்களும், கையில் கமண்டலமும் இருந்தன. பிரம்மனும், சிவனும் கிருஷ்ணனின் புகழ்பாடி, கிருஷ்ணனுக்கு எதிரே உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்தனர்.